மனிதர்களின் மீது நம்பிக்கை குன்றாமல் எழுதிய படைப்பாளியின் படைப்பு விமர்சனங்கள்! - ஜானகிராமம்
ஜானகிராமம் - ஜானகிராமனின் படைப்புகளைக்குறித்த கட்டுரைகள் கல்யாணராமன் காலச்சுவடு பதிப்பகம் பத்திரிகையாளர் நா கதிர்வேலன் மூலம் அறிந்துகொண்ட நூல். அவரைப் பொறுத்தவரை நூல்களை வேகமாக வாசிக்ககூடியவர். வார இதழ்களில் எழுதிய சினிமா கட்டுரைகளை வாசித்தாலே திஜாவின் ஆழமான பாதிப்பை உணர முடியும். எண்ணூறு பக்கங்களுக்கும் மேலுள்ள நூல். மொத்தம் நூறு கட்டுரைகளை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதில், இடம்பெற்றுள்ள ரமேஷ் வைத்யா என்பவரின் கட்டுரை நீங்கலாக மற்ற கட்டுரைகள் அனைத்துமே ஓரளவுக்கு ஜானகிராமனின் கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என பலவற்றையும் விமர்சனநோக்கில் அணுகியுள்ளது. நூலில் நூறு கட்டுரைகளில் சுகுமாரன், மாலன், சு வேணுகோபால், சு தமிழ்செல்வன் என சிலரின் கட்டுரைகள் படிக்க சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒருகதை, இரண்டு கதை அல்லது அத்தனை கதைகளையும் என எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள்.மாலன் போன்ற எழுத்தாளர், ஓரளவுக்கு அனைத்து கதைகளையும் விளக்கி விமர்சனம் செய்ய முற்படுகிறார்கள். நூலின் நிறைய இடங்களில் பொதுவாக ...