இடுகைகள்

வெப்பமயமாதல் - மீத்தேன் வெளியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப்பநிலை மாறுபாட்டுக்கு பசு காரணமா?

படம்
பசுக்களும் மீத்தேன் வெளியீடும்! பசுப்பண்ணைகளால் மீத்தேன் வெளியீடு அதிகரிக்கிறதென ஆய்வகத்தில் பரிசுத்த இறைச்சி, தாவர புரதங்களின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் போக்குவரத்து வாகனங்களால் 28% பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மீத்தேன் வெளியீட்டில் பசுக்களின் பங்கு 9% மட்டுமே. நிலப்பரப்புகளை குறைத்தாலும் 2.6% மட்டுமே குறையும். உலகளவில்   தோராயமாக 1.5 பில்லியன் கால்நடைகள் அனைத்து பருவநிலைச்சூழலிலும் வாழ்ந்து வருகின்றன. இதன் மூலம் 66 மில்லியன் டன் மாட்டிறைச்சி, 6.5 பில்லியன் டன்கள் பால், உரங்கள், தோல்,எரிபொருள், ஆகியவை இதன்மூலம் கிடைக்கிறது. பசுவிலிருந்து மூளை, ரத்தம், தோல், கொழுப்பு, எலும்பு, கொம்பு, கழிவு ஆகியவை உணவு,மருந்து, உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் பயன்படுகிறது. பசுப்பண்ணை நிலங்கள் அதன் கழிவுகளின் மூலம் மேலும் வளம்பெறுவதை கார்பன் வெளியீட்டு அறிக்கைகள் திறமையாக மறைக்கின்றன. மின்நிலையங்கள், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் செயற்கை கார்பன் வெளியீடுகளே அதிகம்.