இடுகைகள்

அசுரகுலம் 6 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிகளைக் கொன்று வாழ்வில் உயர்ந்த மருத்துவர்!

படம்
  மருத்துவத்துறையில் நிறைய தொடர்கொலைகாரர்கள் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு தடுப்பது மிக கடினம். தடுப்பதற்குள் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். பிணக்கூராய்வு செய்து உண்மையை அறிந்தகொள்ள வேண்டும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர். இரண்டாம் உலகப்போர் சமயம் ஊக்கத்துடன் செயல்பட்டு 500 பேரை கொன்றார். உண்மையில் இப்போது கூறியுள்ளது கூட தோராயமான எண்ணிக்கைதான். உண்மையான எண்ணிக்கை அல்ல. ஃபிரெட், 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். நல்ல படிப்பாளி. விளையாட்டு வீரரும் கூட. எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதத்தில் அலைந்த ஆள். எனவே, நெருங்கிய நட்பு அமையவில்லை. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதல் முறை விண்ணப்பத்து தோற்றுப்போனவர். இரண்டாவது முறை வெற்றி பெற்று மருத்துவப்படிப்பு படித்தார். தனிமையாக வகுப்பறைக்கு வந்து படித்தவர், பதினேழு வயதான பிரைம்ரோஸ் ஆக்ஸ்டோபி என்ற தனது ஜூனியர் பெண்ணை மணம் செய்தார். 1966ஆம் ஆண்டு மணம் செய்தவருக்கு, 1967ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். 1971ஆம் ஆண்டு மகன் பிறந்தான். 1974ஆம் ஆண்டு தொடங்கி மருத்துவப் பயிற்சி செய்யத் தொடங்கினார். தனது சக மருத்துவர்கள், நோயாளிகளிடம் ப

பெற்றோருக்கு நீதிவேண்டி பெண்களை கொலை செய்யத் தொடங்கிய சீரியல்கில்லர்- ஸ்டானியாக்

படம்
  போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டானியாக், அவரது சிறுவயது வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பெற்றோர், தங்கை ஆகியோர் காரில் சென்றபோது இன்னொரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த ஸ்டானியாக், மனம் உடைந்து போனார். போலந்து நாட்டின் நீதித்துறையும் ஊழலுக்கு அடிபணிந்ததுதான். அங்கேயும் நீதிதேவதையை   பாண்டேஜ் வகையில் ஆதி தொழிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஸ்டானியாக்கின் பெற்றோரைக் கொன்ற வாகனத்தை ஓட்டி வந்தவர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் அல்லது தொடர்புகளை வைத்திருந்தவர். விமானப்படை கேப்டன் மனைவி. நீதித்துறை காசுக்கும் செல்வாக்குக்கும் எப்போதும் அடிபணியும் என்ற வாக்கு மீறப்படவில்லை. அவரை குற்றவாளி இல்லை என விடுவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டவர், படித்து முடித்து வேலை தேடினார். அரசு அமைப்பில் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து எப்படி பெற்றோரின் சாவுக்கு நீதியைப் பெறுவது என யோசித்தார். அதற்கு செய்யவேண்டிய முதல் வேலை, அரசு நாளிதழுக்கு

பெண்களை மட்டுமே குறிவைத்து கொன்ற யார்க்‌ஷையர் ரிப்பர் - பீட்டர்

படம்
  பீட்டர், பதிமூன்று கொலைகளை   செய்தவர். இவரது மனைவி, ஸிஸோபெரெனியா நோயாளி. பல்வேறு மனநல சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றார். ஐந்து ஆண்டுகளில் பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய கொலையாளி. யார்க்‌ஷையர் ரிப்பர் என்பதுதான் பீட்டரின் அடைமொழி. பீட்டர் ஏன் கொலையாளி ஆனார், கொலை செய்யத் தொடங்கினார் என்பதைக் கண்டறிவது கடினமான ஒன்று. பிணக்கூராய்வு அறையில் வேலை செய்தவர், பிணங்களை நேசிப்பவராக உடலுறவு கொள்பவராக மாறிப்போனார். இதை பேச்சு வாக்கில் சக நண்பர்களிடம் சொன்னார். ஆனால் அதை எல்லோரும் ஜோக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் பீட்டர், தான் செய்வதை சீரியசாக எடுத்துக்கொண்டுதான் செய்தார். அவரின் முக்கிய பொழுதுபோக்கே,   மெழுகுச்சிலை அருங்காட்சியத்திற்கு சென்று சிலைகளைப் பார்த்து ரசிப்பதுதான். விலைமாதுக்களிடம் உடலுறவு கொள்வது பற்றிய பயம் பீட்டரின் மனதில் இருந்தது. 1975ஆம் ஆண்டு இரண்டில் ஒன்று என கொலைக்கு தயாரானார். இரண்டு பெண்கள் சிக்கினார்கள். சுத்தியால் அடித்து கபாலத்தை உடைத்தார்தான். ஆனாலும் காவல்துறை கண்டுபிடித்து உயிரைக் காப்பாற்றிவிட்டது. 1976ஆம் ஆண்டு, அடுத்த அட்டெம்ப்டை வெற்றிகரமாக செய்து முட

ஸிஸோபெரெனியாவால் நோயாளிகளைக் கொல்லத் தொடங்கிய செவிலியர் - பாபி

படம்
  அமெரிக்காவின் இலினாய்ஸில் பிறந்த பெண்மணி. கூச்ச சுபாவம் கொண்ட உடல் பருமனான குழந்தை. இவருக்கு ஏழு சகோதரர்கள் உண்டு என்றாலும் அனைவருமே தசை சிதைவு குறைபாடு கொண்டவர்கள். இதில் இரண்டுபேர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பாபியைப் பொறுத்தவரை கூச்ச சுபாவி என்பதால் அவரை எங்குமே பார்க்க முடியாது. அவரை உற்சாகமாக ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் ஞாயிறுதோறும் தேவாலயத்தில் இனிய குரலில் பாடல்களை பாடுவது, கருவிகளை இசைப்பது என அந்த தருணங்களில் மட்டுமே பார்க்கலாம். மதம் தொடர்பான விஷயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1973ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர், செவிலியராக வேலை பார்க்க நினைத்து அந்த படிப்பை எடுத்து படித்தார். குடும்பமே நோய் பாதிப்பு கொண்டிருந்த தால் பாபியின் வேலையும் அதைச் சார்ந்தே மாறியது.படிப்பை முடித்து தன்னை செவிலியராக பதிவு செய்துகொண்டார். பின்னாளில் டேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆசைத் திருமணத்திற்குப் பிறகுதான், தன்னால் பிள்ளை பெற முடியாது என்ற உண்மையை அறிந்தார். வேறுவழியின்றி , தனது கணவருடன் சேர்ந்து ஆண் குழந்தையை தத்தெடுத்தார். ஆனால் நன்றாக வளர்ந்து வந்த அவனுக்குமருந்து கொடுத்ததி

49 பெண்களை கொலை செய்ததற்காக மன்னிப்புக் கடிதம்

படம்
  ரிட்ஜ்வே, கேரி லியோன் அமெரிக்காவில், 1982-2001 ஆகிய ஆண்டுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் என 49 பேர் கடத்தப்பட்டு பின்னர், கொல்லப்பட்டனர். வாஷிங்டனைச் சேர்ந்த காவல்துறை, கொலையாளியைத் தேடிக்கொண்டிருந்தது. கொலையாளிக்கு க்ரீன் ரிவர் கில்லர் என பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது. பச்சை ஆற்றின் கரையில்தான் கொன்றவர்களை கொலையாளி புதைத்து வைத்தார். கரை நெடுக பிணங்களாக காவல்துறை தோண்டியெடுத்தனர். அப்போதும் கூட நிறைய பிணங்களின் அடையாளம் தெரியவில்லை.   1982ஆம் ஆண்டு சியாட்டிலில் லியான் வில்காக்ஸ் என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் டகோமா எனும் பகுதியைச் சேர்ந்த பெண்மணி. இதற்கடுத்தும் ஒரு கொலை நடைபெற்றது. ஆனால், இரு கொலைகளுக்கு இடையிலான ஒற்றுமை பெரிதாக ஏதுமில்லை. இதனால் காவல்துறை அதை பச்சை ஆற்றுக் கொலைக் கணக்கில் சேர்க்கவில்லை. 1982ஆம் ஆண்டு   ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெண்டி, ஜிசல், டெபோரா, மார்சியா, சிந்தியா ஆகிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு பச்சை ஆற்றின் அருகே கொல்லப்பட்டு கிடந்தனர். கொலை அடுத்தடுத்து நடைபெற, காவல்துறைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகள்,   கொலையாளி

அம்மாவால் வல்லுறவு கொலையாளியான மகனின் கதை!

படம்
  லூகாஸ், ஹென்றி லீ அம்மாக்களைப் பற்றிய கதைகள், சினிமாக்கள் நிறைய பார்த்திருப்பவர்களுக்கு லூகாஸின் கதை பிடித்தமானதாக இருக்காது. அப்படியொரு அம்மாவாக பூமியில் வாழ்ந்தவர். குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் கடைசியாக பிறந்து அம்மாவின் அனைத்து வெறுப்பையும் பெற்றவர் லூகாஸ். அதற்கு பதிலடியாக மொத்த சமூகத்தையும் பழிதீர்த்தார். அப்பா, ஆண்டர்சன்   மதுபானத்தை தயாரிப்பதே வேலை. வேலை முடிந்ததும்   தயாரித்த மதுவை குடித்துவிட்டு தெருவில் படுத்து உருள்வார். அம்மா, வயோலா மதுவை விற்று காசு சேர்ப்பதும், சீசனுக்கு விபச்சாரம் செய்வதும் வேலை. அவர் தன் கணவனையும், மகனையும் பழிவாங்குவதற்கு இருவரையும் தான் செக்ஸ் வைத்துக்கொள்ளும் அறையில் இருக்க வைப்பார். அதுதானே சிறந்த பழிவாங்கல். லூகாஸ் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். அவருக்கு, பெண்கள் உடையை அணிவித்துஅனுப்பினாள் வயோலா. காலில் ஷூக்கள் இல்லை. அதை ஆசிரியர் வாங்கிக் கொடுத்தார்.’’ எதற்கு அன்பளிப்புகளை வாங்கினாய்?’’ என அம்மா அடிக்காத அடி கிடையாது. லூகாஸ் ஆசையாக பூனை வளர்த்தால், அதை கொன்று தெருவில் வீசுவது அம்மா வயோலாவுக்கு பிடித்தமானது. மகனை எப்படியெல்

சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

படம்
  பீட்டர் கர்டன் ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது. குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார். ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் கொண்ட

காய்கறிச்செலவுகளைக் குறைக்க மனித இறைச்சியை சாப்பிட்டவர்!

படம்
  க்ரோல் ஜோச்சிம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வல்லுறவு கொலையாளி. இவரது கொலை   செய்யும் பாணி என்பது, பெண்களை பிடிப்பது, வல்லுறவு செய்து கொல்வது, பிறகு அவர்களின் புட்டம், கைகளில் உள்ள தசையை அறுத்து சென்று சமைத்து தின்பதுதான். காவல்துறையில் பிடிப்பட்டபோது பதினான்கு பேர்கள் என கொலைக்கணக்கு கூறினார். ஆனால் உண்மையில் பதினான்கு ஆண்டுகளாக கொலை செய்து வருவதால் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகம். தான் வாழ்ந்த வீட்டில் ஏராளமான செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்தார். ஒருவரைக் கொன்றால் அவர்களின் கழுத்தை நெரித்தபடியே சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உண்டு. வீட்டில் சுய இன்பம் அனுபவித்தாலும் வெளியில் வந்து குற்றம் செய்யும்போது அனைத்தும் லைவ்தான். எனவே, நேரடியாக வல்லுறவு செய்து கொன்றுபோட்டுவிட்டு வருவது வாடிக்கை. சில கொலைகளில் தசையை அறுத்து வரவில்லை. வல்லுறவு மட்டும் செய்துவிட்டு வந்தார். ஆனால், மனிதர்களை கொன்று சமைத்து தின்று தனது காய்கறி செலவை கட்டுப்படுத்த முயன்றதுதான் மாட்டிக்கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. கொலை செய்த குழந்தையின் உடல் உறுப்புகளை பாத்திரம் கழுவும் சிங்கில் தள்ளிவிட அது, குழாயில் மாட

தந்தையும் மகனும் சேர்ந்து கொலைகார இணையராக மாறிய வினோதம்!

படம்
  ஜோசப், மைக்கேல் அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். 1936இல் பிறந்தார். சிறுவயதில் ஆஸ்திரிய அகதிகளான ஸ்டீபன், அன்னா கலிங்கர் ஆகியோருக்கு   தத்து கொடுக்கப்பட்டார். பெற்றோரால் கடுமையாக அடித்து துவைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர். 1944ஆம் ஆண்டுமூத்த சிறுவர்களால் கத்தி முனையில் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக கையில் கத்தி வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்து கைத்தொழில் மன்னனாக மாறினார். பதினேழு வயதில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவுமூலம் பத்து குழந்தைகள் பிறந்தன.பிறகு, ஜோசப்பின் மனைவி இன்னொருவரோடு இணைந்து வாழச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகுதான் ஜோசப்பிற்கு விபத்து ஏற்பட்டது. அதில், தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு சோதனை செய்து பார்த்து, சைக்கலாஜிகல் நெர்வஸ்   டிசார்டர் என்ற பிரச்னையைக் கண்டுபிடித்தனர்.   தனது பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த திருமணம் பற்றி கவலைப்பட்டவர், திருமணத்தை செய்வோம் ஆண்டவன் அனுகிரகிப்பான் என மணம் செய்துகொண்டார். தான் வாழ்ந்த வீட்டையோ என்ன காரணத்தாலோ தீ வைத்தார். அதற்கு காப்பீடாக 1,600 டாலர்கள் கிடைத்தது.மனநல பிரச்னைகளால்,

ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

படம்
  ‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்   உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்ற

''கொலைகளை செய்யாமல் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை''

படம்
  1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிகாகோவின் புறநகரான லிங்கன்வுட்டில் பிறந்தார். அப்பா, தனியார் உருக்காலையில் வேலை செய்து வந்தார். வில்லியமிற்கு செக்ஸ் என்பது மகா பாவம் என சொல்லி வளர்த்தனர். செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் வரும் என கூறினார்கள். பிறரது வீட்டுக்குள் பிறந்து, அங்கு வாழும் பெண்களின் ஜட்டி, பேன்டீசை திருடுவது வில்லியமிற்கு   மகிழ்ச்சியாக   இருந்தது. ஏறத்தாழ பாலுறவு கொள்வது போன்ற சந்தோஷம். 1942ஆம் ஆண்டு வில்லியமிற்கு பதிமூன்று வயது. அப்போதே குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று காவல்துறையால் கைதானார். வில்லியமின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் அளிக்க, அவர்கள் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போதே பதினொரு கொள்ளைகளை வில்லியம் செய்திருந்தான். ரைபிள், நான்கு பிஸ்டல்கள் என திருடி வைத்திருந்தான். பெற்றோர் தம் செல்வாக்கைப் பயன்படுத்த வில்லியம் மீது வழக்கு பதியப்பட வில்லை. இந்தியானாவில் உள்ள பள்ளியொன்றில் பதினொரு மாதங்கள் இருந்த வில்லியம், பின்னர் ஊருக்குத் திரும்பினார். வில்லியம் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருட வில்லை. அதை வாய்ப்பு கிடைக்கும்போது அணிந்தும

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நா

வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி

படம்
  அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.   அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள். கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.   ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க

கொலம்பியாவின் குழந்தை வல்லுறவு கொலையாளி

படம்
  கிராவிடோ, லூயிஸ் ஆல்ஃபிரடோ போதைப்பொருட்கள் பரவலாக விற்கும் நாடான கொலம்பியாவில் வன்முறை சம்பவங்களுக்கும் குறைவில்லை. மக்களைக் கொல்வது, அரசியல்வாதிகளைக் கொல்வது என்பது மழை பெய்வது, வெயில் காய்வது போல தினசரி நடக்கும்   நாடு. 1990களில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்தது. யார் இதை செய்கிறார் என தொடக்கத்தில் பலருக்கும் தெரியவில்லை. கடத்தப்பட்டவர்களில் அதிகம் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் குறைவு. கொலம்பியாவின் போகோட்டாவிலுள்ள மிகுவாலிடோ என்ற மாவட்டத்தில்   காணாமல் போன பிள்ளைகளை தேடத் தொடங்கினர். 1995ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. பனிரெண்டு ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை என பதிமூன்று   பிணங்கள்   தோண்டியெடுக்கப்பட்டன. இதில், பிணங்களுக்கு தலைகள் இல்லை. எட்டிலிருந்து பதிமூன்று வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். இறந்தவர்களின் உடல்களில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இறந்தவர்களை யார் என காவல்துறையால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. 1998ஆம் ஆண்டு, குழந்தைகளை கொலை   செய்த குற்றவாளி

குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

படம்
  எட்வர்ட்ஸ், மேக் ரே 1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.   22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்   என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார். 1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிற