பெற்றோருக்கு நீதிவேண்டி பெண்களை கொலை செய்யத் தொடங்கிய சீரியல்கில்லர்- ஸ்டானியாக்
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டானியாக், அவரது சிறுவயது
வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பெற்றோர், தங்கை ஆகியோர் காரில் சென்றபோது இன்னொரு
வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த
ஸ்டானியாக், மனம் உடைந்து போனார். போலந்து நாட்டின் நீதித்துறையும் ஊழலுக்கு அடிபணிந்ததுதான்.
அங்கேயும் நீதிதேவதையை பாண்டேஜ் வகையில் ஆதி
தொழிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஸ்டானியாக்கின் பெற்றோரைக் கொன்ற வாகனத்தை ஓட்டி வந்தவர்
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் அல்லது தொடர்புகளை வைத்திருந்தவர். விமானப்படை
கேப்டன் மனைவி. நீதித்துறை காசுக்கும் செல்வாக்குக்கும் எப்போதும் அடிபணியும் என்ற
வாக்கு மீறப்படவில்லை. அவரை குற்றவாளி இல்லை என விடுவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரின்
தலைமுடி பொன்னிறமாக இருந்தது.
அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டவர், படித்து முடித்து
வேலை தேடினார். அரசு அமைப்பில் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அங்கு
சில ஆண்டுகள் வேலை செய்து எப்படி பெற்றோரின் சாவுக்கு நீதியைப் பெறுவது என யோசித்தார்.
அதற்கு செய்யவேண்டிய முதல் வேலை, அரசு நாளிதழுக்கு செய்து ஒன்றை அனுப்பினார். சிவப்பு
இங்கில் கடிதத்தை எழுதினார். ‘’கண்ணீர் துளிகள் இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. இறப்பு இல்லாமல்
வாழ்க்கை இல்லை. கவனமாக இருங்கள் நான் உங்களை அழ வைக்கப்போகிறேன்’’ என்று எழுதியவர்
பெயரை சிவப்புச் சிலந்து என்று கூறினார்.
இரண்டு ஆண்டுகளில் சொல்லியது போல இருபது பெண்களை,
அதுவும் பொன்னிற தலைமுடி கொன்றவர்களை கொலை செய்தார். நாஜிகளிடமிருந்து போலந்து விடுதலை
பெற்ற நாளில் பதினேழு வயது பெண்ணை வல்லுறவு செய்து கொன்றார். கொலையை உலகிற்கு கடிதம்
மூலம் சொன்னார். அதில் ஆல்ஸ்டீன் என்ற இடத்தில் மலரைப் பறித்துவிட்டேன். அடுத்து வேறிடம்
செல்கிறேன். விடுமுறை நாட்களில் ஈமச்சடங்கு இல்லாமல் இருக்காது. கொலைகளை மறுபடியும் செய்வேன் என கூறியிருந்தார்.
அடுத்த விடுமுறை நாளில் பதினாறு வயது பெண் கொல்லப்பட்டார்.
அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் இருந்த தொழிற்சாலையின் கீழ்தளத்தில் இறந்து கிடந்த
பெண்ணின் உடலை காவல்துறை தேடி மீட்டது. அடுத்து
துறவிகள் விடுமுறை தினத்தில், விடுதி வரவேற்பறை பெண்ணை ஸ்டானியாக் கொன்றார். உடலை ஸ்க்ரூ
ட்ரைவர் வைத்து சிதைத்திருந்தார். கண்ணீர்த்துளிகள்தான்
அவமானத்தின் கறையை துடைக்கும் என கடிதம் எழுதி காவல்துறைக்கு அனுப்பினார். அடுத்து,
தொழிலாளர் தினத்தில் பதினேழு வயது பெண்ணை வல்லுறவு செய்து கொன்றார். பெண்ணின் உடலை, அவளது வீட்டுக்கு
பின்னாலிருந்த இடத்தில் வீசிச் சென்றார்.
கிறிஸ்துமஸ் அன்று ரயிலில் ஒரு பெண்ணை வல்லுறவு செய்து
உடல் உறுப்புகளை சிதைத்து கொன்றார். காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் ''மீண்டும் கொலை
செய்தேன்'' என்று எழுதி அனுப்பினார். 1967ஆம் ஆண்டு கலைஞர்கள் கிளப்பில் இருந்த உறுப்பினரை
கொலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றவரை காவல்துறை கைது செய்தது. மொத்தம் 20 கொலைகள். ஸ்டானிக்கை, மனநல சிகிச்சை மையமான கடோவிச் என்ற இடத்திற்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அனுப்பி
வைத்தது.
பெற்றோர்கள் விபத்தில் இறந்தனர், ஆசை தங்கையும் அவர்களோடு மரணித்தாள் என்பது உணர்வுப்பூர்வமான சம்பவம். அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என ஸ்டானிக் நினைத்தார். ஆனால் வெறும் கொலை என்பதோடு பெண்களை வல்லுறவு செய்ததுதான் அவர் இயல்பு, நோக்கம் திரிந்துவிட்டதைக் காட்டுகிறது.
படம் - பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக