இடுகைகள்

கிரு கேஷிகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெசவாளர்களை வாழ வைக்கும் உடை வடிவமைப்பாளர்களின் முயற்சி!

  கேரளத்தில் பிரபலமாகும் பாலின பாகுபாடற்ற ஆடைகள் கேரளா மாநிலத்தின் செண்டமங்கலம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு காரணம் புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களின் ஆடைகள். இவர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து நெய்து விற்பதுதான். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கம் முதலில் நஷ்டத்தில் இயங்கியது. இதன் ஆடைகள் மக்கள் பெரிதாக அடையாளம் கண்டு வாங்கவில்லை.   ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையினர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஶ்ரீஜித் ஜீவன், ஷாலினி ஜேம்ஸ், ஆகிய வடிவமைப்பாளர்கள் மேலும் பலருடன் சேர்ந்து கைவிடப்பட்டு வந்த கைத்தறி நெசவை மீட்டெடுக்க முயன்றனர். 2022ஆம் ஆண்டு இருபத்து நான்கு வயதான பருல் குப்தா, யுகா எனும் பிராண்டை உருவாக்கினார். இதற்கு உதவிய ஹெச் 47 சங்கம் இதனால் மக்களிடையே புகழ்பெற்றது. கடந்த செப்டம்பரில் இந்த பிராண்டில்   33 புதிய ரகங்கள் வெளியாயின. இப்போது பருல் குப்தா, கிரு கேஷிகி எனும் புதிய ஆடை ரகங்களை வெளியிட்டுள்ளார். இந்த ரகங்களின் சிறப்பு, இவற்றை ஆணும், பெண்ணும் என இரு பாலினத்தவருமே அணியலாம் என்பதுதான். அதாவத