மீண்டும் பத்து ரூபாய்! - 1page story
மீண்டும் பத்து ரூபாய் ! அண்ணாச்சி , மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர் , சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான் . பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான் . அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர் , கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான் . வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான் . உடனே , நடந்து சென்று , கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான் . பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர் . வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான் . பிள்ளைகள் ஞாபகம் வர , உள்ளே நுழைந்தான் . ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு , பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான் . ஐநூறு ரூபாயைக் காணவில்லை . கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது . சங்கருக்கு உள்ளூர பீதியானது . கடையில் இருந்து வெளியே வந்தவன் , பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான் . பர்ஸில் எந்த கிழிசல் , ஓட்டையும் இல்லை . அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே ? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான் . ...