புகழ்வெளிச்சம் எப்போதும் ஆபத்தானது! - எர்னோ ரூபிக், க்யூப் கண்டுபிடிப்பாளர்

 














”க்யூபை எப்படி உருவாக்கினேன் என்றே எனக்கு தெரியாது!”



ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் உருவாக்கினார். 

 1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். 

1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார்.

க்யூப்பை உருவாக்கியபோது தனது அம்மாவின் வீட்டில் இருந்தார். ஜியோமெட்ரிக் வடிவங்களின் மீது ஆர்வம் கொண்ட எர்னோ ரூபிக், பல்வேறு வடிவங்களில் க்யூபை செய்து பார்த்தார். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. பிறகுதான், உருவாக்கிய அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்றாக இயந்திரத்தில் பற்சக்கரங்கள் போல இயங்குவதை அடையாளம் கண்டார்.

 ஆறுபுறம், ஆறு வண்ணங்கள் என பிறகுதான் இறுதிவடிவம் கிடைத்தது. தான் உருவாக்கிய க்யூப் பற்றி க்யூபெட் என்ற நூலை எழுதியிருக்கிறார். எப்படி க்யூப்பை உருவாக்கினீர்கள் என்று கேட்டால், எனக்குத் தெரியவில்லை. க்யூப் புகழ்பெற்றபிறகும் கூட பேராசிரியராக பணியாற்றியதால் கிடைத்த 200 டாலர் பணத்தில்தான் வாழ்க்கையை ஓட்டினார். க்யூப் உருவாக்கியது கூச்ச சுபாவம் கொண்ட எர்னோவுக்கு பெரிதாக பயன் தரவில்லை. ”எனக்கு புகழ் வெளிச்சம் மீது நம்பிக்கை இல்லை. அது மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போல. மிகவும் ஆபத்தானது ” என்று சொல்கிறார் எர்னோ க்யூப். 

 நம்பிக்கை பிறந்ததும் ஹங்கேரி நாட்டு காப்புரிமை அலுவலகத்தில் க்யூப்பை பதிவு செய்தார். 1977ஆம் ஆண்டு தொடங்கி க்யூப் ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டு விற்கப்படத் தொடங்கியது. 

ரூபிக் க்யூபை வேகமாக நகர்த்தி அனைத்து புறங்களிலும் ஒரே விதமான நிறங்களைக் கொண்டு வருவது என்பது கடினம். 2018ஆம் ஆண்டு க்யூபிக் புதிரை சீன நாட்டைச் சேர்ந்த யூசெங் டு என்பவர் 3 நிமிடம் 47 நிமிடங்களில்  என்ற கால அளவில் நிறைவு செய்தது சாதனையாக உள்ளது. உலகம் முழுவதும் க்யூப்கள் 35 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.  உலக க்யூப் சங்கம், ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட க்யூப் புதிர்ப்போட்டிகளை நடத்தி வருகிறது.  




Original article by

Readers digest 

July 2022



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்