இடுகைகள்

உலக அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாட்டிக்கொண்ட சர்கோசி!

படம்
ஊழல் சுழலில் அதிபர் ! பிரான்சின் முன்னாள் அதிபர் சர்கோசி , மறைந்த லிபியா அதிபர் கடாபியிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் .  2007-2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸை ஆண்ட சர்கோசி , இத்தேர்தலுக்காக கடாபியிடம் 50 மில்லியன் யூரோ ( தோராயமாக 400 கோடி ) வாங்கினார் என்பதே புகார் . 2011 ஆம் ஆண்டு கடாபியின் மகன் சயீப் அல்இஸ்லாம் அப்பாவிடம் பெற்ற பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறி சர்கோசியின்மீது குற்றம்சாட்டினார் .  முன்னாள் லிபியா உளவாளி அப்துல்லா அல்செனுசி , அதிபரின் முன்னாள் வழக்குரைஞர் என பலரும் வாக்குமூலம் கொடுக்க சர்கோசியின் குற்றம் விரைவில் சட்டரீதியிலான சிக்கலை எதிர்கொள்ளவிருக்கிறார் . எதிர்க்கட்சி அலுவலகங்களை உளவு பார்த்தது உள்ளிட்ட செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட அதிபர் நிக்சனின் வாட்டர்கேட் ஊழல் , இத்தாலி அதிபர் சில்வியா பெர்லுஸ்கோனி 2010 ஆம் ஆண்டு பதினேழு வயது மொராக்கோ பெண்ணை வன்புணர்வு செய்த விவகாரம் , அதிபர் பில் கிளிண்டன் , மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் 1995-97 காலகட்டத்தில் கொண்ட முறையற்ற உறவு ஆகியவை உலகளவில் பரபரப்பாக சர்கோசி விவகாரத்திற்கு முன்பு

புடினும் ஜின்பிங்கும் உலகிற்கு சொல்ல வருவது என்ன?

படம்
உலகின் புதிய மன்னர்கள் ! ரஷ்யாவில் நான்காவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாதீமிர் புடின் ,    2024 வரை ஆட்சியில் இருக்க ஜனநாயக வழியிலேயே புதியபாதை உருவாக்கிவிட்டார் . புடினின் ஜனவசீகரத்தை பத்திரிகைகள் புகழ்ந்தாலும் புடினுக்குப் பிறகு ரஷ்யா என்னாகும் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை என்பதே கசக்கும் நிஜம் .  சீனாவில் அதிபர் சட்டத்தை திருத்தி வாழ்நாள் அதிபராக மாறியுள்ள ஜின்பிங் மற்றும் புடின் என இருவருமே நவீன ஜனநாயகத்தை மீண்டும் மன்னராட்சி காலகட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள் .  சீனா , ரஷ்யா இருநாடுகளும் உலகில் வலிமையானதற்கு லெனின் , ஸ்டாலின் , மாவோ உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் காரணம் என்றாலும் இன்று , அந்த அடையாளங்களை துடைத்துவிட்டு வலதுசாரிகளின் முக்கிய மையங்களாக மாறிவருகின்றன . ரஷ்யாவின் இங்கிலாந்து , அமெரிக்கா , உக்ரைன் சைபர் தாக்குதல்கள் , உளவாளிகளின் கொலை , சீனாவின் கடல் ஆதிக்கப் போர் , கடன் வலையில் நாடுகளை வளைப்பது என ஆசியப்பகுதிகளில் கதாநாயகனாக இருப்பது யார் என்று போட்டியிலும் இறங்கிவிட்டன . மன்னரின் சொல்லே கட்டளை பின் அதுவே சாசனம் என்று ம