இடுகைகள்

5ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றச்சாட்டுகளை பூமாரி போல எதிர்கொண்ட ஹூவாய் நிறுவனர் ரென் - பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் மின்னூல் வெளியீடு

படம்
    அமெரிக்க அரசால் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதன் நிர்வாக கொள்கைகளை வகுத்தவர், ரென். நிறுவனத்தின் ஆன்மிகத் தலைவரும் அவர்தான். எப்படி ஜெயித்தார் என்பதை பல்வேறு சம்பவங்களை விளக்கி சற்று எளிமையான முறையில் சுருக்கமாக சொல்லும் நூல்தான் இது. வளவளவென சுற்றி வளைக்காமல் என்ன விஷயமோ அதைப்பற்றி மட்டுமே கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதனால் போனில், டேபில் படித்தாலும் வேகமாக வாசிக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியான சாதக அம்சம். இதைத்தாண்டி ரென் எப்படி ஹூவாவெய் நிறுவனத்தை கட்டமைத்தார். பன்னாட்டு உலக நிறுவனமாக அதை மாற்றினார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.  ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்ட ஆப்பிளுக்கு நிகரான தரத்தைக் கொண்டுள்ளன. இப்படியொரு வளர்ச்சி எப்படி சீனத்துக்கு சாத்தியமானது என்பதையும் ரென் நூலில் கூறியுள்ளார். இப்படி ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவை புரிந்துகொள்வதன் மூலம் நான் முன்னேற வேண்டிய பாதை தெ

நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

படம்
  ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா 2019 படி படம் - LA Times தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.   இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.   சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட

விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?

படம்
  விமான சேவையை பாதிக்கிறதா 5 G? அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.  பயம் ஏன்? அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன.  இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.   பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை,  இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ

15 ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போன் வாங்கப்போகிறீர்களா? - இந்த போன்களை ட்ரை செய்யுங்கள்

படம்
  போகோ எம்3 புரோ 5ஜி உலகத்தில் ஆடை இல்லாமல் கூட இருக்கலாம். அதைக்கூட புது பேஷன் என்று சொல்லிவிடலாம். ஆனால் பழைய போனுடன் இருந்தால் வீட்டில் உள்ள குட்டீஸ் கூட மதிக்காது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவது பட்ஜெட் போன்கள்தான்.இந்த பதினைந்தாயிரம் ரூபாய் கேட்டகிரியில் கூட 5 ஜி லெவல் போன்களும் உண்டு. சாம்சங், போகோ, ரியல்மீ, ஜியோமி, மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் போன்கள் இவை.  போகோ எம்3 புரோ 5ஜி 14,599 ரூபாய் போன். ஒருரூபாய் தந்துவிடுவார்கள் என நம்பலாம்.  5 ஜி போன் இது. மீடியாடெக் 700 சிப், 90 ஹெர்ட்ஸ்ல் திரை அடிக்கடி புத்துயிர் பெறுமாம். 5000எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி கேமரா பின்புறம் உள்ளது. மேற்சொன்ன காசுக்கு ஸ்டைலான போனு வேணும் சேட்டா என்றால், இதையே இ வலைத்தளங்களில் ஆர்டர் செய்து மோட்சம் பெறுங்கள்.  சாம்சங் கேலக்ஸி எம்32 அதிக நேரம் பைத்தியம் பிடித்த வெட்டுக்களி போல சமூக வலைத்தளங்களில் பறந்து திரிபவரா, ஓடிடியில் வெப்சீரிஸ், திரைப்படங்கள் என ஏராளமாக பார்க்கணுமே ப்ரோ என்பவரா உங்களுக்காகத்தான் இந்த போன். 12499 ரூபாயில் இருந்து விலை தொடங்குகிறது. 6ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, அமோல்ட் திரை. 6.4 இன்ச்சில்

புதிய எலக்ட்ரானிக் பொருள்களின் வருகை - சிஇஎஸ் 2020

படம்
அமெரிக்காவின் லாஸ்வேகாசில் தொடங்கவிருக்கும் சிஇஎஸ் விழாவில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட சாதனங்களை நிறுவனங்கள் இந்த விழாவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 5ஜி இந்தியாவில் 3ஜிக்கும் 2 ஜிக்கும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறோம். டெல் நிறுவனம் தனது மடிக்கணினியில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. மீடியாடெக், க்வால்காம் ஆகிய நிறுவனங்கள் 5ஜிக்கான சாக்கெட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளன. செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட்போன்கள் முதல் காலையில் முதல்வேலையாக செல்லும் டாய்லெட்டுகள் வரை செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் உள்ளது. இந்த முறையும் பல்வேறு பொருட்களை ஏஐ என்று சொல்லி அறிமுகப்படுத்த டெக் நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பார்த்து வாங்குங்கள். மைக்ரோ எல்இடி டிவிகளில் பிளாஸ்மா, ஓஎல்இடி எல்லாம் பழசு. அதனால்தான் புதிய தொழில்நுட்பமாக மைக்ரோ எல்இடி தயாராகி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை பெற்று அறிமுகப்படுத்தும் நிறுவனங்களே 2020ஆம் ஆண்டு டிவி சந்

5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

படம்
இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம். இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம். தொழில்வளர்ச்சி விர்...... 5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை. தொலைத்தொடர்பு சிறப்பு! ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும். ஸ்மார்ட் வகுப்பறை! அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவ

ஹூவெய் கம்பெனிக்கு அடுத்த சிக்கல்!

படம்
ஹூவெய் நிறுவனத்திலிருந்து கூகுள் விலகல்! சீன நிறுவனமான ஹூவெய், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் நிறுவனரை கைது செய்தது இருநாட்டு நல்லுறவையும் பாதித்துள்ளது. இந்நிலையில் அக்கம்பெனியின் வணிகத்தை குலைக்கும் வகையில் அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ஹூவெய் போனுக்கான சேவையிலிருந்து கூகுள் விலகவுள்ளது. இதற்காகவெல்லாம் ஹூவெய் கவலைப்படவில்லை. நாளை இங்கிலாந்தில் ஹானர் 20 மாடலை வெளியிடவுள்ளது. இது இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஹூவெய்தான். கூகுளின் ஆண்ட்ராய்டை பெருமளவு பரப்பியதிலும் சீன நிறுவனமான ஹூவெய்யின் பங்கு அதிகம். இப்போது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் கூகுள் தன் சேவைகளை ஹூவெய் நிறுவன போன்களில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூகுளின் முடிவைத் தொடர்ந்து இன்டெல், க்வால்காம் ஆகிய நிறுவனங்களும் தங்களின் தொடர்பை சீன நிறுவனங்களிடம் முறித்துக்கொள்ளவிருக்கின்றன. ஏறத்தாழ சீனாவுடனான பனிப்போரை வணிகத்திலிருந்து அமெரிக்கா தொட