இடுகைகள்

தாவுதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும் விளையாட்டுப் பொருட்களாக சிம்