இடுகைகள்

தீவிரவாதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது! - கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்

படம்
                கேப்டன் அம்ரீந்தர்சிங் பஞ்சாப் மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சி 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக உருவாக்கியிருந்தது . இன்று அதனை மறைத்து பேசுகிறது என குற்றம்சாட்டியுள்ளாரே ? மண்டிகளை நீக்கும் திட்டம் பற்றி… . ஆனால் காங்கிரஸ் கட்சி 2017 இல் ஏன் இப்போதும் கூட மண்டிகளை நீக்குவதாக கூறவில்லையே . நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதுதான் . ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் . விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது விவகாரம் . இதற்கு மத்திய அரசு உள்ளே நுழைந்து வணிக விதிகளை வகுப்பது தேவையில்லாதது . இதை நாங்கள் விரும்பவில்லை . அப்படியென்றால் பிரதமர் மோடி உங்களை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்கிறீர்கள் . பிற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கவேண்டும் என்பது உங்கள் கருத்து அப்படித்தானே ? ஆமாம் . ஆலோசித்தபிறகு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவது சரியான முறை . ஆனால் அரசியலமைப்பு நடைமுறையை ஒதுக்கி மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில் விவசாயிகள

மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
    பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ மூளைச்சலவை எப்படி செய்யப்படுகிறது? மூளைச்சலவை என்பதை கருத்துகளை சீர்திருத்துவது, கருத்துக்களை கட்டுப்படுத்துவது என்று கூறலாம். காஷ்மீரிலுள்ள இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு பிடித்து அவர்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டும் கருத்துகளை மனதில் திணித்து தீவிரவாதிகளாக மாற்றுகிறது. இதுபற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள். தன்னுடைய கருத்துக்கு எதிராக உள்ளவரை தன்னை நோக்கி, கருத்துகளை நோக்கி இசைவாக திருப்புவதுதான் மூளைச்சலவை. கூறப்படும் கருத்துகளைப் பொறுத்து விளைவுகள் நல்லதாக, அல்லதாக அமையும். கொரிய நாடுகளுக்கு இடையே போர் நடந்தபோது, பல நூறு அமெரிக்க வீரர்கள் இடதுசாரி கொரிய நாட்டு ராணுத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடதுசாரி சிந்தனைகளால் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் திரும்ப அமெரிக்காவுக்கு திரும்ப வரவில்லை என்று கூறிவிட்டனர். பேட்டி ஹியரஸ்ட் என்ற பதிப்புத்துறை சார்ந்த பெண்மணி 1974ஆம் ஆண்டு இடதுசாரி விடுதலைப்படையால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பின்னாளில் பேட்டி இடதுசாரி ராணுவத்துடன் இணைந்து வங்கியை கொள்ள

”சர்ஜிகல் ஸ்ட்ரைக்குகளை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை”

படம்
Outlook\SURESH K. PANDEY ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரம், எங்கிருந்தாலும் தன் எழுத்தில் கவனிக்க வைக்கும் திறன் கொண்டவர். தமிழில்:ச.அன்பரசு புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எப்படி எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்? உதாரணத்துக்கு நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தால் எப்படி செயல்பட்டிருப்பீர்கள்? புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பேன். இரண்டாவதாக, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். அவர் பாகிஸ்தானி ஆள் கிடையாது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். உள்நாட்டிலுள்ள மக்களின் மனங்களை வெல்லாமல் காஷ்மீரின் தீவிரவாதத்தை  நம்மால் அழிக்க முடியாது. இந்த தாக்குதல்  இந்தியா பாகிஸ்தானை போர்முனையில் சந்திக்கவேண்டும் என்கிற குரல்களை அதிகப்படுத்தியுள்ளது. வலிமையான தலைவர் அதனை ஆதரிப்பார் என நினைக்கிறீர்களா? நிச்சயம் வலிமையான தலைவர், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். அதாவது, போர் தேவை என்று குரல்களை அவர் ஆதரிக்க மாட்டார். நாட்டு எல்லையில் தீவிரவாதிகளை தடுப்பது, அதற்கான முயற்சிகள் என்பது அவசியம் தேவை. ஆ