இடுகைகள்

இயற்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?

படம்
  இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா? தூக்கத்திற்கு நேரம் முக்கியம் சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.  காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.  ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.  முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.  வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.  தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை...

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்

படம்
    டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் ஸ்கை பெர்ரிமன் skye perryman அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர் அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண். மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார். கெல்லி ராபின்சன் சாண்ட்ரா டயஸ் sandra diaz இயற்கை பன்மைத்துவ போராளி ஒர...

பிரிவாற்றாமை பாடல்களில் பெருகி ஓடும் இயற்கை அழகு- அகநானூறு- நித்திலக்கோவை - நூறு பாடல்கள்

      அகநானூறு - நித்திலக்கோவை நூறு பாடல்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரை இலக்கியத் திட்டம் அகநானூறு பாடல்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில், நித்திலக்கோவை என்பது இறுதிப்பகுதி. இதில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே தலைவன் பிரிவைப் பற்றி தலைவி பிரிவாற்றாமையோடு பேசுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைவி பாடலைப் பாடுகிறாள். அல்லது தோழி தலைவனால் தலைவி நோயுற்று வாடுவதைக் குறிப்பிடுகிறாள். தொன்மையான அழகிய தமிழ் சொற்களை வாசிக்கவேண்டுமெனில் அகநானூறு நமக்கு உறுதியாக உதவும். ஏராளமான அழகிய தமிழ்சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நக்கீரர், பரணர், இளவெயினியார், கபிலர் என பல்வேறு புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் பிரிவாற்றாமை பாடல்கள்தான். அத்தனையிலும் இயற்கை அழகு, வாழுமிடங்களின் செழுமை ஆகியவற்றைப் பாடிய பிறகு காதலை உரைக்கிறார்கள். பாடல்களில் காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் எப்படி அனைத்து உயிரினங்களுக்கும் இ...

விடுமுறையில் கேம்ப் அடித்து உற்சாகம் கொள்ளும் சீனர்கள்!

படம்
        விடுமுறையைக் கொண்டாட கேம்ப் அடிப்போம்! காட்டுக்குள், மலைப்பகுதிக்குள், பாலைவனத்திற்குள் வேலையாக செல்பவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு டெண்ட் கொட்டாய்களை அமைப்பார்கள். இதை அனைவரும் பார்த்திருப்போம். சில இடங்களில் கேம்ப்புகளில் தங்கியும் இருப்பீர்கள். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டால், மக்கள் உடனே மலைப்பகுதி, காடுகளின் அருகில் சென்று கேம்புகளை அமைத்து தங்கி ஓய்வெடுக்கிறார்கள். இதற்காகவே சீனாவில் கேம்புகளை அமைத்துக்கொடுக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், டெண்ட்கொட்டாய் துணிகளை மட்டும் வழங்குவதில்லை. பிறந்தநாள் விருந்து, காதலைச் சொல்லப் போகும் தம்பதிகளுக்கான முன் ஏற்பாடுகள் என காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். கேம்பில் தங்குபவர்களுக்கான உணவுகளையும், அந்த இடத்திலேயே புதுமையாக அமைத்துக் கொடுத்து காசு வாங்கி கல்லா கட்டி வருகிறார்கள். கேம்புகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் போட்டியும் கூடி வருகிறது. குடும்பங்களாக சென்றால் குழந்தைகளை சமாளிக்கவேண்டுமே அவர்களுக்கென மண்பானை செய்வது, தோல் பொருட்களை செய்வது என பல...

அமெரிக்காவில் வழங்கப்பட்ட முதல் காப்புரிமை!

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுமே தொடர்புடையது என்றாலும் இலக்குகள் வேறுபட்டவை. இயற்கை உலகின் அடிப்படை அறிவைப் பெறுவதே அறிவியலின் இறுதி லட்சியம். அறிவியலை விளக்குவதற்காக ஆராய்ச்சி, கொள்கை, விதிகள், சமன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் வழியாக இயற்கை உலகை அனைத்து மக்களும் புரிந்துகொள்கிறார்கள். தூய அறிவியல் என அழைக்கும் இத்துறையில் படிக்கும் ஆட்களே குறைந்து வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது இயற்கை உலகில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கானது. இதன் அடிப்படை நோக்கம், மனித குலத்தை மேம்படுத்துவது, சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை மட்டுமே. இந்த தொழில்நுட்பத்திற்கு அறிவியலின் கொள்கை, விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. டபுள் பிளைண்ட் ஸ்டடி என்றால் என்ன? ஒரு ஆய்வில் பங்கேற்பவர்கள், அதை நடத்துபவர்கள் ஆகியோருக்கு ஆய்வு பற்றி முக்கியமான அம்சங்கள் தெரியாமல் இருப்பது எனலாம். இந்த வகையில், ஆய்வு பாகுபாடு இன்றி, போலித்தனமாக இல்லாமல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அறிவியல் கொள்கை, வித...

சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!

படம்
            பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த...

சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!

படம்
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது. ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது. மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து க...

ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?

படம்
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக...

காட்டுத்தீக்கு காரணம் என்ன?

படம்
  காட்டுத்தீக்கு காரணம் என்ன? அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது. காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது.  இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது....

எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

படம்
  மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்? மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம்.  சமூகவலைத்தள போதை வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.  உண்மையான நண்பன்  சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களா...

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறர...

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்ட...

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சு...

விநோதரச மஞ்சரி - புயல்

படம்
  விநோத ரச மஞ்சரி புயல்களுக்கு யார் பெயர் வைத்தது என கேட்கத் தோன்றும் அளவுக்கு பல்வேறு பெயர்களை உலக நாடுகள் சூட்டி வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி டிரெண்டிங்கை தொடங்கினார். அமெரிக்காவில் 1950களில் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியது. அடுத்து, இதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி ரோக்ஸி போல்டன் போராடினார். எனவே, அவருக்காக 1979ஆம் ஆண்டில் இருந்து புயல்களுக்கு பெண்களின் பெயரும் வைக்கப்படத் தொடங்கியது. உலக வானிலை அமைப்பு, புயல்களுக்கான பெயர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறது. இந்த பட்டியல் நம்மூரில் உள்ள அ, ஆ, இ, ஈ போல அந்த ஊரில் ஏ,பி,சி, டி என வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. மொத்தம் 21 பெயர்கள் இடம்பெறும். க்யூ, யூ, ஒய், இசட் ஆகிய ஆங்கில எழுத்துகள் விலக்கப்பட்டன. இந்த பெயர்கள் 2020,2021 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. ஆலங்கட்டி மழை   பெய்வது வீட்டில் கல் எறிவது போல இருக்கும். இதே வகையில் நாய், பூனை, தவளை ஆகியவை புயலில் வானில் இருந்து பொழிவதுண்டு. இன்னொரு இடத்தி...

இயற்கையோடு கொள்ளும் தொடர்பை இழக்கக்கூடாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி கூறிய கருத்துகள் பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.   ஆனால் அவர்களுக்கு இடையில் எதற்கு இத்தனை முரண்பாடுகள், பிரச்னைகள் உருவாகின்றன? இதற்கு எளிதான காரணங்களாக அதிக மக்கள்தொகை, அறநெறி வீழ்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து மக்களின் நேரடி தகவல் தொடர்பு குறைந்துபோனது   என்று குறிப்பிடலாம். உண்மையில் இப்படி முரண்பாடுகள் ஏற்பட அடிப்படைக் காரணங்கள் என்ன? பாரம்பரியமாக நன்மைகள், கருணை, உயிர்களைக் கொல்லாமை, இரக்கமின்றி   நடந்துக்கொள்ளாமை ஆகியவற்றை போதித்த நாடு எங்கே தவறாகிப்போனது. அதன் செயல்பாட்டில் எங்கே தவறு நடந்தது? பாம்பே – ஜனவரி 1968 மீட்டிங் லைஃப்   தொன்மைக் காலத்தில் பேராசை, அதிகாரம் ஆகியவற்றில் சிக்காமல் சுதந்திரமாக மக்கள் குழுவினர் வாழ்ந்தனர். பேராசை, அவநம்பிக்கை ஆகியவற்றில் அகப்படாமல் வாழ்ந்த மக்கள் குழுவினரால், ஆன்மிகம், அறம் ஆகியவை வீழ்ச்சியடையாமல் பிழைத்தன.   இந்த மக்கள் குழு, பெரிதாகும்போது சமூகத்திற்கும் அதேயளவில் பாதுகாப்பு கிடைத்தது. இப்படி பாதுகாப்பு கிடைத்து தப்பித்த சில நாடுகளில் இந்த...