இடுகைகள்

2018 - பத்திரிகையாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மைக்கு குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் -2018

படம்
மனிதர்கள் 2018 ஊடகங்கள்- உண்மைக்காக போராடும் பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா ராப்ளர் என்ற இணைய செய்திதள நிறுவனர். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்டே நாட்டில் நிகழ்த்தி வரும் போதைப்பொருள் படுகொலைகளை அம்பலப்படுத்திய மனசாட்சியின் சுதந்திரக்குரல். அதிகாரம் என்ன செய்யும்? அதேதான் உண்மையைக் கூறிய ஒரே காரணத்திற்காக இணையதள நிருபர்களுக்கு அரசு விழாக்களில் அனுமதி மறுக்கப்பட்டது. ரெஸா மீது வரிவருவாய் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மரியாவுக்கு பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மனித உரிமை அமைப்பின் கணக்குப்படி பனிரெண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். "நான் போர்காலத்திய செய்திகளை பதிவு செய்யும் பத்திரிகையாளன். இப்போது எங்கள் நாட்டை நான் அப்படித்தான் குறிப்பிட வேண்டும்" என்கிறார் ரெஸா. வா லோன், கியாவ் சோ ஊ ராய்ட்டர் செய்தியாளர்களான இருவரும் மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்கியா அட்டூழியங்களை பதிவு செய்து செய்திகளாக தொகுத்ததுதான் அவர்கள் செய்த குற்றம். உடனே அவர்களை கைது செய்த மியான்மர் அரசு, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு