இடுகைகள்

மிளகாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

படம்
              காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.  தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம்...

நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!

படம்
  கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.  மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை  பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.  உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.  ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.  வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.  இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.  டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உண...