இடுகைகள்

டெய்ல்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலவச மென்பொருட்கள் - டெய்ல்ஸ் 5.0, எரேசர் ப்ரீ, க்யூ டையர்

படம்
  இலவச மென்பொருட்கள் பிரைவசி எரேசர் ப்ரீ 5.23 சி கிளீனர் பயன்டுத்தியிருப்பீர்கள். வேலைகள் எல்லாம் அதேபோலத்தான். வித்தியாசம் எளிமையான அதன் செயல்பாடுதான். கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கிறது. ஹார்ட் டிஸ்கை தூய்மையாக வைக்கிறது. குக்கீகளை கூட எதை அழிக்கலாம் விட்டுவிடலாம் என்ற ஆப்சன்கள் இருக்கிறது. கூடுதலாக புரோகிராம் அன்இன்ஸ்டாலரும் உள்ளது. வேகமாக புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்கிறது. மற்றது பர்ஸ் கனமாக இருந்தால் காசு கொடுத்து மென்பொருள் வாங்கினால் கூடுதல் விஷயங்களைச் செய்யலாம்.   விண்டோஸ் 7, 8.1, 10, 11 வர்ஷன்களில் பயன்படுத்தலாம்.  க்யூ டையர் 10.73 ஃபைல் எக்ஸ்ப்ளோரர் பணிதான். முதலில் இயக்கியவுடன் இடியாப்பத்திற்குள் இட்லி, பொங்கல் இருப்பது போல தோன்றும். விரைவில் அந்த மயக்கம் களைந்து கணியம் சீனிவாசன் போல நுட்ப வல்லுவத்துவத்தை பெற முடியும். கொஞ்சம் நிதானம் தேவை. மற்றபடி பயன்படுத்தி புரிந்துவிட்டால் இந்த மென்பொருள் உங்களை வெகுவாக ஈர்க்கும்.  விண்டோசில் மட்டும் பயன்படுத்தும் மென்பொருள்தான் இதுவும்.  டெய்ல்ஸ் 5.0 எட்டு ஜி.பி இருக்கும் யூஎஸ்பியை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினால் தான