இடுகைகள்

காமாக்கதிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளி மர்மங்களை ஆராயும் ஆய்வுக்கூடங்கள்!

படம்
  ஆராய்ச்சிக்கூடங்கள்! விண்வெளிக்குச் சென்று பால்வெளியின் மர்மங்களை அறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதேவேளையில் இங்கிருந்தபடியே நியூட்ரினோ, மின்காந்த கதிர்வீச்சுகளைக் கண்டறியும் சோதனைகளும் குறைவின்றி நடக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்.  நியூட்ரினோ ஆய்வகம் (Protodune) நியூட்ரினோ துகள்களைக் கண்டுபிடிக்கும் இந்த ஆராய்ச்சிக்கூடம், பிரான்சுக்கும், ஸ்விட்சர்லாந்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த நியூட்ரினோ மையத்தில் 800 டன்கள் ஆர்கன் திரவ வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது. செர்ன் மையத்தில் டியூன் அமைப்பு சோதிக்கப்பட்டது. நியூட்ரினோ துகள்களின் தன்மை, அதன் எதிர்தன்மை கொண்ட துகள்கள் ஆகியவற்றை இதில் சோதித்து பார்க்க முடியும்.  காமாக்கதிர் ஆய்வகம் (HIGH-ALTITUDE WATER Cherenkov Reservatory) மெக்சிகோவில் அமைந்துள்ள காமா கதிர்களை ஆராய்ச்சி செய்யும் ஆய்வகம் இது. பிகோ டி ஒரிஸாபா எரிமலையின் நிழல் போல அமைந்துள்ள ஆய்வகத்தில் 300 இரும்பு டேங்குகள் உள்ளன. விண்வெளியிலிருந்து வரும் காமாகதிர்களை நீரில் செலுத்தி அதன் விளைவை ஆராய்வதே நோக்கம்.  ஈர்ப்புவிசை ஆய்வகம் (LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERV