இடுகைகள்

மலையாளம் திலக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

படம்
  திலக்கம் திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்   தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை. ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுகளாக விளம்