இடுகைகள்

கல்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  2019 - தெலுங்கு இயக்கம் ஒளிப்பதிவு இசை கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.   886 × 1024 கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன. ஆஹா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி வு என அன

காந்தியின் மனதை உலுக்கிய நவகாளி பயணம்! - சாவி

படம்
பிபிசி தமிழ் நவகாளி யா த்திரை  சாவி பதிப்பாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ்டிஜிட்டல் லைப்ரரி நவகாளி யாத்திரை பற்றி இந்து தமிழ்திசையில ஆசைத்தம்பி எழுதியிருந்தார். அப்போதுதான் இதுபற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக தேடியபோது சாவியின் இந்த நூல் தட்டுப்பட்டது.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான போராட்டங்கள் அப்போது நடந்து வந்தன. முஸ்லீம் லீக் தொடங்கிய போராட்டங்கள் வன்முறைக்கான தொடக்கமாக இருந்தன. இதனை அப்படியே இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள் பெரிய கலவரமாக மாற்றின. இதன் விளைவாக கராச்சி, கொல்கத்தா, வங்கதேசத்தின் நவகாளி, தர்மாபூர், பீகார் ஆகிய இடங்களில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனை நீங்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுதலாம். அதேசமயம் வார இதழுக்கான நகைச்சுவை கமழவும் எழுதலாம். சாவி, இரண்டாவது ரூட் பிடித்து வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார். இரண்டு நாட்கள்தான் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்கி அவரை நவகாளி யாத்திரையைப் பதிவு செய்ய அனுப்புகிறார். சாவி அந்த நிகழ்ச்சியை மிக அழகாக, அங்கதச்சுவையோடு எழுதியுள்ளார். காந்தி, ராஜாஜி உர