இடுகைகள்

பா ரஞ்சித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை நாயகர்கள்- கார்த்திக் ஆர்யன், பா ரஞ்சித், தனுஷ், புவன் பாம்

படம்
கார்த்திக் ஆர்யன் எப்போதுமே புதுசுதான்!  கார்த்திக் ஆர்யன் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். 2011இல் வெளியான பியார் கா பன்ச்னாமா என்ற படம் அது. அதனை பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லவ் ரஞ்சன் இயக்கிய நவீனமான காதல் கதைப்படம் அது.  குவாலியரில் பிறந்த கார்த்திக் ஆர்யன் பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு சினிமா பின்புலம் ஏதும் கிடையாது. பதினெட்டு வயதில் மும்பைக்கு வந்தவர் கார்த்திக்.  எனக்கு எந்த இரண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே வாய்ப்புதான். அதில் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது என்பவர் சொல்லியபடியே இரண்டு பன்ச்னாமா பாகங்களில் நடித்தார். பிறகு சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்திலும் நடித்து நமது மனதை கவர்ந்தார்.  பிறகு நடித்த லூக்கா சூப்பி, பதி, பத்னி ஆர் வோ ஆகிய படங்கள் மெல்ல ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட புதிய இயக்குநர்களோடு பணியாற்றவே மெனக்கெடுகிறார். வண்டி நன்றாக ஓடும்போது எதற்காக இந்த ரிஸ்க் என பலரும் கார்த்திக்கிடம் கேட்கிறார்கள்தான். ஆனால்...