இடுகைகள்

இந்தியா - சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் மாசுபாடுகளால் புயல்களின் வலிமை அதிகரித்து வருகின்றன! - வானியலாளர் ரகு முர்டுகுடே

படம்
கடல் வெப்பமாவதால் புயல்கள் வலிமையாகின்றன ரகு முர்டுகுடே, தட்பவெப்பநிலை வானியலாளர்(மேரிலேண்ட் பல்கலைக்கழகம்) வரலாற்றுரீதியாக புயல்கள் அரபிக்கடலில்தான் உருவாகி வந்துள்ளன. வங்காள விரிகுடாவில் புயல்கள் அதிகம் உருவாகி வரவில்லை. இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? பருவகாலத்திற்கு முன்னர் நீங்கள் கூறியபடி வங்காள விரிகுடா, அரபிக்கடல்களில் புயல்கள் உருவாகின்றன. நவம்பரில் வங்காள விரிகுடாவில் மட்டும் 80   சதவீத புயல்கள் உருவாகின்றன. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் சற்று குழப்பமானவை. நம்மிடம் ஆழமான தகவல்கள் இல்லை என்றாலும் மாசுபாடு, அரபிக்கடலில் ஏற்படும் புயல்களை தீவிரப்படுத்துவதாக தோன்றுகிறது. இந்தியா புயல்களிலிருந்து எப்படி தப்பி பிழைப்பது? பொதுவாக, பேரிடர் மேலாண்மைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்திய தட்பவெப்பநிலை நிறுவனத்தின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பது அவசியம். நகரத்திலுள்ள கழிவுநீர் அமைப்புகளை சீர்படுத்துவது முக்கியம. மாங்குரோவ் காடுகள் அழிவு, நகரிலுள்ள மரங்கள் தீவிரமாக அழிக்கப்படுவது அனைத்தும் புயல்கள் தீவிரமடைவதை ஊக்குவிக்கின்றன. அதற்கு முன்னரே அதனைத் தவிர்க்கும், பாதிப்ப

சூழலியல் பிரச்னைகளால் தொழில் நடவடிக்கைகள் நிற்க கூடாது! சீட்ஸ் அமைப்பு

படம்
வணிகத்திற்கும், சூழலியலுக்குமான புரிந்துணர்வு முக்கியம். மனு குப்தா, அன்சு சர்மா இவர்கள் இருவரும் சீட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் சூழல் சார்ந்த பேரிடர் சம்பவங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக சூழலியலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உழைத்து வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். இயற்கை சார்ந்த பேரிடர் சம்பவங்களில் அரசு, தனியார் நிறுவனங்கள், உங்களைப்ப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் ஆகியோரின் பங்கு என்ன? அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் இடைவெளி உள்ளது. அதனை நிரப்ப எங்களைப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் சார்ந்த சம்பவங்கள் நடக்கும்போது நாங்கள் புதிய விஷயங்களைக் கற்று வருகிறோம். அரசு புதிய கொள்கைகளை வகுக்கும்போது தனியார் துறை அதற்கு உதவும்படி தொழில்நுட்பங்களை தந்து உதவ வேண்டும். இதனை மக்கள் சமூகம் ஏற்று உறுதிசெய்து தேவையான தகவல்களைத் தரவேண்டும். இதில் ஊடகம் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்தியா தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறதா? பிற நாடுகளை விட

காமன்வெல்த் அமைப்பில் இந்தியாவின் பங்கு 50 சதவீதம் ஆகும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து , காமன்வெல்த் செயலாளர்

படம்
pixabay காமன்வெல்த் அமைப்பு தனது உறுப்பினர் நாடுகளில் வெப்பமயமாதலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பொதுச்செயலாளர் பேட்ரிசியா ஸ்காட்லாந்தை சந்தித்துப் பேசினோம். ஆங்கிலத்தில்: மன்கா பேஹ்ல் பெருந்தொற்று பாதிப்பு உலகமெங்கும் இருக்கிறது. இதற்கும் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு இருக்கிறதா? வெப்பமயமாதல் பாதிப்பு இப்போதும் இருக்கிறது. இப்போது திடீரென ஏற்பட்டுள்ள கோவிட் -19 பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக தீவிரமாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலை தெற்காசியா, கரீபியன் பகுதிகளின் வாழ்நிலையை கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பால் வெப்பமயமாதலுக்கான பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியவில்லை. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான திட்டம் ஒன்றின் மூலம் பல்வேறு அம்சங்களை இணைக்க முயன்று வருகிறோம். வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் காமன்வெல்த் அமைப்பின் பங்கு என்ன? காமன்வெல்த் அமைப்பில் தற்போது 54 நாடுகள் உள்ளன. மக்கள்தொகை 2.4 பில்லியன். அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முப்பது வயதிற்கும் உட்பட்டோர். 32 நாடுகள் சிறிய நாடுகள் என்றும், அதில் 24 தீவு

அதிகரிக்கும் ரேஞ்சர்களின் கொலை!

படம்
வனங்களில் பலியாகும் ரேஞ்சர்கள் ! கடந்த பிப் .20, 2017 அன்று இரவு உணவுக்கு பிறகு டீ அருந்திக்கொண்டிருந்த சத்தீஸ்கர் ரைகார் மாவட்ட ரேஞ்சர் ராம் லேடரின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது . திறந்த ராம் லேடர் அடுத்தநாள் பிணமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார் . கெலோ ஆற்றில் சட்டவிரோத கொள்ளையை தடுத்த செயலுக்கு ராம் லேடர் கொடுத்த விலை அவரின் உயிர் . 2017 ஆம் ஆண்டு காங்கோவில் 17, தாய்லாந்து 8 , இந்தியாவில் 28 என வனக்காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை தேசிய ரேஞ்சர் ஃபெடரேஷன் அறிக்கை தெரிவித்துள்ளது . 2012-2017 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 526 ரேஞ்சர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . கொலைகளின் எண்ணிக்கை விகிதம் 31-162% ஆக அதிகரித்துள்ளது . காங்கோ , தாய்லாந்து , கென்யா , அமெரிக்கா , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விடவும் அதிகம் . வனங்கள் உறிஞ்சும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 11.25% மதிப்பு 6 லட்சம் கோடி . " உலகிலேயே இந்தியாவில் பலியாகும் வனக்காவலர்களின் எண்ணிக்கை அதிகம் " என்கிறார் ரேஞ்சர் ஃபெடரேஷன் தலைவர் சீன் வில்மோர் .