சூழலியல் பிரச்னைகளால் தொழில் நடவடிக்கைகள் நிற்க கூடாது! சீட்ஸ் அமைப்பு





CHD GROUP-SEEDS sign MoU for building Disaster Resilience in India ...


வணிகத்திற்கும், சூழலியலுக்குமான புரிந்துணர்வு முக்கியம்.

மனு குப்தா, அன்சு சர்மா இவர்கள் இருவரும் சீட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் சூழல் சார்ந்த பேரிடர் சம்பவங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக சூழலியலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உழைத்து வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

இயற்கை சார்ந்த பேரிடர் சம்பவங்களில் அரசு, தனியார் நிறுவனங்கள், உங்களைப்ப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் ஆகியோரின் பங்கு என்ன?

அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் இடைவெளி உள்ளது. அதனை நிரப்ப எங்களைப் போன்ற சூழலியல் நிறுவனங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் சார்ந்த சம்பவங்கள் நடக்கும்போது நாங்கள் புதிய விஷயங்களைக் கற்று வருகிறோம். அரசு புதிய கொள்கைகளை வகுக்கும்போது தனியார் துறை அதற்கு உதவும்படி தொழில்நுட்பங்களை தந்து உதவ வேண்டும். இதனை மக்கள் சமூகம் ஏற்று உறுதிசெய்து தேவையான தகவல்களைத் தரவேண்டும். இதில் ஊடகம் முக்கியமான பங்கை வகிக்கிறது.

இந்தியா தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறதா?

பிற நாடுகளை விட இந்தியா தொழில்நுட்பத்தின் நெடுஞ்சாலையில் பயணித்து வருகிறது. இன்று காடுகளிலுள்ள முக்கியமான பன்மைச்சூழல் இடங்கள், விலங்குகளின் வாழிடங்கள், மரங்கள் செறிந்துள்ள இடங்கள் ஆகியவற்றை செயற்கைக் கோள் மூலமே அடையாளம் காண முடியும். இதன்மூலம் சரியான சூழல் மாதிரிகளை நாம் உருவாக்கி பயன்படுத்த முடியும். இதில் மனிதர்களின் தலையீடும் அவசியத்தேவை. அப்போதுதான் நம்மால் ஆபத்தான நிலையிலுள்ள இயற்கை ஆதாரங்களை, விலங்குகளை அடையாளப்படுத்தி காப்பாற்ற முடியும்.

சீட்ஸ் அமைப்பைத் தொடங்கியபோது மக்கள் நிறையப் பேர் நகரங்களுக்கு இடம்பெயரத்தொடங்கினார்கள் அல்லவா? இந்த பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்?

தொண்ணூறுகளில் இந்தியாவில் வேகமான நகர்ப்புற வளர்ச்சி தொடங்கியது. இதன் விளைவாக ஏராளமான மக்கள் நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி நகர்ந்தனர். நாங்கள் அப்போது சீட்ஸ் நிறுவனத்தை தொடங்கிய தொழில்மயமாக்கம் அதன் விளைவுகளைப் பற்றி ஆராயத் தொடங்கினோம் இதன் வழியாகத்தான் நாங்கள் கவனம் பெற்றோம். இயற்கை பேரிடர்களான வெள்ளம், மழை, நிலநடுக்கம் ஆகியவற்றில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சொத்துகளை இழந்த அவர்களிடம் நாங்கள் சென்று தகவல்களை சேகரித்து அவர்களுக்கான உதவிகளைக் கிடைக்கச் செய்கிறோம்.

நீங்கள் கூறுவது உண்மைதான். ஆண்டுதோறும் இயற்கை பேரிடர்களால் மக்கள் சொத்துகளை இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி அவர்களுக்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குகிறீர்கள்?

அனைத்து வகை மக்கள் சமூகத்திலும் நாங்கள் அதன் கீழேயுள்ள பல்வேறு தனிநபர்களை தகவல்களுக்காக சார்ந்துள்ளோம். அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் மக்களுக்கு முதல்கட்ட அடிப்படையான விஷயங்களுக்கு உதவுகிறோம். இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கும் பகுதி என்றால், அதற்கேற்ப வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பக்குழு செய்துகொடுக்கும். பிற வசதிகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு பொருளாதார முயற்சிகள், செயல்பாடுகள் முடக்கப்படுகிறதே?

வணிகத்தைப் பொறுத்தவரையில் லாபம் நஷ்டம் என்ற கண்ணோட்டத்துடன் இயற்கையை பார்க்கிறார்கள். இந்த பார்வை தவறானது. இயற்கை சார்ந்த விஷயங்களை அனுசரித்தே தொழில்நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது முக்கியம். இதனால் சூழலியல் சார்ந்து தொழில்நடவடிக்கை முடக்கம் நடைபெறாது. ஐ.நாவின் சிடிஆர்ஐ மாநாடு, இதுபோன்ற கருத்துகளை அனைவரும் புரிந்துகொள்ளவே நடத்தப்பட்டு வருகிறது. தொழில்துறையினரும், சூழலியல் நிறுவனங்களும் கருத்து ஒருமித்து பேசினால், நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொழில் நடவடிக்கைகள் முடக்கம் பெறாது.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, மே 8, 2020

ஆங்கிலத்தில்: தாரு பாஹ்ல்

கருத்துகள்