இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - சின்மயி தும்பே
சின்மயி தும்பே, பொருளாதார
பேராசிரியர் , ஐஐஎம்
ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊரை நோக்கி
நடந்துசென்றுகொண்டிருக்கின்றனர். எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பது?
மத்திய அரசு இந்த சூழ்நிலையைக்
கணிக்காமல் பெரிய தவறு செய்துவிட்டது. முதலிலேயே தொழிலாளர்கள் கிளம்புவதற்கு தயாராக
சில ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தால் நடந்தே தங்கள் வீட்டுக்குச் செல்லும் அவலநிலைமை
ஏற்பட்டிருக்காது. இனி அரசு என்ன உதவிகளை அறிவித்தாலும் அது தொழிலாளர்களுக்கு சேர்வது
கடினம்தான்.
நாம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தகவல்களை சேகரித்து
வைத்தால் என்ன?
2016-17 ஆண்டு பொருளாதார
அறிக்கையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. இவர்களின் எண்ணிக்கை
55 மில்லியன் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது உண்மையல்ல. இடம்பெயர்ந்த தொழிலாளர்களில்
பலர் கட்டுமான தொழிலாளர்களாக தாங்கள் வேலை பார்க்கும் இடங்களிலேயே தங்கியிருந்தனர்.
இதனால் அவர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் பொருளாதார அறிக்கை மிகவும்
குத்துமதிப்பாகத்தான அமைந்து இருந்தது.
குழந்தை தொழிலாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
குழந்தைகள் அவர்கள் பெற்றோருடன்
நடந்து வருவதை நாம் அனைவருமே பார்த்தோமே! இதில் குழந்தைகள் அனைவரும் வேலை செய்வதில்லை.
ஆனால் இளம் வயது பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் பலருக்கும் சம்பளம் ஆண்களை விட
குறைவு. கட்டுமானத்தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா?
தொழிலாளர்களுக்கு முதலாளிகள்
பொதுமுடக்க காலத்தில் ஊதியம் தரவேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இது நடைமுறையில்
கடினமானது. பெரும்பாலும் இவர்களுக்கு சம்பளம் தரப்படாது. ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை
திட்டம் பத்தாண்டுகளுக்கு மேல் அரசு அலுவலக மேசைகளில் கிடந்தது. நிதியுதவி அப்போது
கிடைக்கவில்லை. இப்போது இந்த திட்டம் நடைமுறையில் இருந்தால் தொழிலாளர்களுக்கு உதவியாக
இருக்கும். ஆனால், இதிலும் மாநில மத்திய அரசுகளின் ஆதரவும், செயல்பாடுகளும் தேவை. இதன்
மூலம் பீகார் தொழிலாளர் மும்பையில் உணவுப்பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெறலாம்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் கௌன்சில் இதற்காக அமைக்கப்பட்டால் மட்டுமே பிரச்னைகளை
தீர்த்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
உதாரணம்: ஜிஎஸ்டி கௌன்சில்.
ஆங்கிலத்தில்: பூஜா சர்க்கார்.
கருத்துகள்
கருத்துரையிடுக