படிக்கும் வயதில் தொழிலதிபர்களாக சாதித்த மாணவர்கள்!
















 

லட்சங்களைக் குவிக்கும் இளம் தொழிலதிபர்கள்

முன்னர் ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜில் படித்துவிட்டு நிறுவனம் தொடங்கி வெற்றி பெறுவது பழங்கதையாகிவிட்டது. தற்போது படிக்கும்போது ஏதாவது நிறுவனம் தொடங்கி கல்லூரி படிக்கும்போது லட்சாதிபதியாக பல மாணவர்கள் மாறி வருகிறார். இதற்கு என்ன காரணம்? படிக்கும்போது பெற்றோர் துணையாக இருப்பார்கள். தொழில்முயற்சி என்றாலும் கூட எப்படியாவது உதவுவார்கள். ஆனால் முப்பது வயதில் உங்களை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நஷ்டமானாலும் அதனை நீங்களே ஏற்கவேண்டும் என மில்லினிய தத்துவம் சொல்லுகிறார்கள்.

இவர்கள் தங்களது முன்மாதிரிben stiller success GIFயாக கொள்வது ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் அகவர்வாலைத்தான். இவர் 17 வயதில் நிறுவனத்தைத் தொடங்கி, 22 வயதில் லட்சாதிபதியாகிவிட்டார். இவர் தந்த ஊக்கத்தினால் நிறைய டீனேஜ் இளைஞர்கள் துணிந்து தொழில்துறையில் காலடி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ரத்தன் டாடா போன்றவர்களும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் தேஷ்பாண்டே. இவர் தனது பெற்றோரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஜெனரிக் மருந்துகளை விற்கும் மருந்துகடைகளை தொடங்கி நடத்தி வருகிறார். இப்போது அவரிடம் 30 மருந்து கடைகளும் 65 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர் உள்ளூர் மருந்தகங்களோடு மட்டும் அதிகம் தொடர்புகளை வைத்துக்கொண்டு மருந்துகளை விற்று வருகிறார். ஜெனரிக் ஆதார் என்ற இவரது மருந்துக்கடைகளை ஏன் தொடங்கினீர்கள் என்றால், மருந்துகள் குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதுதான் முக்கியம் என பதில் சொல்லுகிறார் பதினெட்டு வயது தொழிலதிபர். இப்போதும் வணிகப்படிப்பு படித்து வருபவர், அதற்கிடையில் ஜெனரிக் முறையில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளைப் பற்றி படித்து வருகிறார்.

இவரைப்போலவே இன்னொரு தொழிலதிபர் சாதித்துவருகிறார். இவரது பெயர் வருண் கோயல். டுடேக்யூ என்ற கிரிப்டோகரன்சி பரிமாற்ற வணிகத்தை இவர் நடத்திவருகிறார். பதினாறு வயதில் இந்த தொழிலில் காலடி எடுத்து வைத்தபோது வருண் முதலீடு செய்த தொகை வெறும் 400 ரூபாய்தான். தற்போது இவரின் கைபேசி செயலியை 1500 வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறும் இவர், தொழிலுக்கான விலையைக் கொடுத்துதான் ஆகவேண்டும் என்கிறார். வருண் பத்தாவது படிக்கும்போது பிளாக்செயின், கிரிப்டோகரன்சி பற்றி அறிய வந்திருக்கிறது. உடனே செயலில் இறங்கி சாதித்திருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் பலருக்கும் கிரிப்டோகரன்சி பற்றிய அறிவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.  

பதினாறு வயதான அவந்திகா கண்ணா, எடின்பர்குக்கு கோடை விடுமுறைக்காக சென்றிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தொழிலதிபர் ஆசை தோன்றியிருக்கிறது. பயணிகளை இந்தியாவின் தொன்மையான இடங்களுக்கு சுற்றுலா கூட்டிச்செல்வதுதான் அது. தற்போது பதினெட்டு வயதாகும் அவந்திகா, இந்தியா ஸ்டோரி என்ற பெயரில் ஒலி முறையில் சுற்றுலா செல்வதற்கான கையேட்டை உருவாக்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் அவந்திகா தனது குழுவினரின் மூலம் 360 டிகிரியில் தொன்மை இடங்களைப் பார்க்கும் வசதிகளை உருவாக்கியிருக்கிறார்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

ஆங்கிலத்தில்: சோபிதா தர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்