போதைப்பொருள் கூட்டத்தை பிடிக்க காவல்துறை ஆடும் ஆட்டம்! - தேடினால் கிடைக்காது - ராஜேஷ்குமார்


 

Scam, Hacker, Security, Virus, Fraud, Crime, Criminal
பிக்ஸாபே




அது இது எது?

சென்னையில் காட் மைன் என்ற போதைப்பொருள் மறைமுகமாக விற்கப்படுகிறது. இதனை யார் விற்கிறார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் கைது செய்ய ஆதாரம் வேண்டுமே? அதற்கு அவர்கள் ஏராளமான திருப்பங்கள் நிறைந்த நாடகமே அது இது எது?

 

குமுதா நேர்காணலுக்கு செல்கிறாள். அவள் துப்பாக்கியை பூக்காரியிடம் வாங்கும்போதிலிருந்து கடைசி வரை நமக்கு பதற்றம் குறையவே மாட்டேன்கிறது. இதற்கு இடையில் சூடாமணி என்ற இளம்பெண்ணை அவளது பெற்றோர் அட்மிட் செய்துவிட்டு தடாலெட காணாமல் போகிறார்கள். குமுதா நூறு பேர் கலந்துகொள்ளும் நேர்காணலில் சிம்பிளாக ஒரே ஒரு மிரட்டல் வீடியோவைக் காட்டி வேலையை வாங்குகிறார். அந்த வீடியோவைப் பார்த்து கம்பெனி உரிமையாளர் சங்கர் பிரபு ஏன் வியர்த்து வழிகிறார், அதன் பின்னணி என்ன என்பதை நாவலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

விறுவிறு வென்ற வேகமும், கச்சிதமான உரையாடல்களும் நாவலுக்கு பலம் சேர்க்கின்றன. இறுதிப்பகுதியில் ஐயையோ ஹேமா கைமாவா என நினைக்கும்போதே வரும் அதிரடி திருப்பம் ஆசம் சொல்ல வைக்கிறது.

 

2

விடாதே விவேக் விடாதே

சென்னையிலிருந்து தலைநகருக்கு சென்று விவேக் தன் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கும் கதை.

வீ ஹேட் இந்தியா என்ற தீவிரவாத அமைப்பு ரூசோ என்ற முக்கியமான நபரை விபத்தில் இழக்கிறது. அந்நபரை காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவர் ஆனந்த கிருஷ்ணன் இந்த விவகாரத்தில் சிக்கிக்கொள்கிறார். அவருக்கு ஏதாவது ஆபத்து நேருமா என நாம் திக்கித் திணறி பழனி முருகனை வேண்டிக் கொண்டிருக்கும்போது, மரபணு விஞ்ஞானியான சந்தீப் கடத்தப்படுகிறார். அவர் வேறுயாருமல்ல முன்னர் சொன்ன டாக்டரின் பையன்தான். அதோடு ரூசோவின் உடலை சோதித்துப் பார்க்கும்போது, அவரது இடது கையில் பாம் வைக்கப்பட்டு இருப்பதும் காவல்துறைக்கு தெரியவருகிறது.

சீரியஸ் பார்ட்டி விவேக், ஜொள்ளு மனிதன் விஷ்ணு என இருவரும் இணைந்து டில்லிக்கு போய் தீவிரவாதிகளை பெண்டு நிமிர்த்துவதுதான் மீதிக்கதை. விவேக்கிற்கான சண்டைக்காட்சிகள் மிகவும் குறைவு. முழுக்க மைண்ட் கேம்தான். ஆனாலும் சுவாரசியமாக படிக்கலாம்.

3

 தேடினால் கிடைக்காது.

சந்தீப் – நீரஜா புதிதாக கல்யாணமான ஜோடி. இருவரும் நீலகிரி ஜாலியாக ஹனிமூன் போய்விட்டு ஊர் திரும்ப நினைக்கிறார்கள். அப்போது பார்த்தால் சாலையில் சந்தீப்பின் நண்பன் சேதுபதி நிற்கிறான். சந்தீப்பின் காரில் ஏறி  குறிப்பிட்ட இடம் வரை வருகிறேன் என்கிறான். அவனை அழைத்துச்செல்லும்போது திடீரென கார் பஞ்சராகி நின்றுவிடுகிறது. அந்நேரத்தில் நீரஜாவின் அப்பாவுக்கு மிரட்டல் போன்கால் வருகிறது. அவரது மாப்பிள்ளை, மகள் இருவரையும் கடத்தி வைத்துள்ளோம். ஐந்து லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம் என்கிறது மர்மக்குரல். பணத்தை சந்தீப்பின் மாமனார் கொடுத்தாரா,  யார் இந்த கடத்தல் பேர்வழிகள் என்பதை காவல்துறை கண்டுபிடிப்பதுதான் இறுதிப்பகுதி.

இதிலும் ஒரு ஒரு கொலை மட்டுமே நடக்கிறது. அதற்குப்பிறகு அனைத்துமே எளிதாக நடந்து முடிய குற்றவாளி பிடிபடுகிறார். இந்தக்கதை நிறைய திருப்பங்களை கொண்டிருக்கவில்லை. வாசிக்க எளிமையான கதை.

கோமாளிமேடை டீம் 










கருத்துகள்