குருவைக் கொல்ல கையில் வாளெடுக்கும் சீடன் - முதல் யுத்தம் -பாலகுமாரன்
ஜிபி |
முதல்
யுத்தம்
பாலகுமாரன்.
சேரதேசத்தில்
இருந்து அருண்மொழிப்பட்டன் சோழதேசத்திற்கு குதிரையில் வரும்போது கதை தொடங்குகிறது.
காந்தளூர்க் கடிகைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் போர்ப்பயிற்சியும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சியும்
முடித்துவிட்டு தஞ்சைக்கு வருகிறான். உபதளபதி தகுதியில் அவனுக்கு பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அவனுக்கு அதைவிட அவனது காதலி சுந்தரியைப் பார்த்துவிட்டு தன் அம்மாவைப் பார்க்கவேண்டும்
என்பதுதான் ஆசை. ஆனால் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுகிறதா
என்ன?
இதற்கான
விஷயங்கள் அவனது குரு குஞ்சன் நம்பூதிரியிடமிருந்தே கிடைத்துவிடுகிறது. அவன் கையில்
வெள்ளிக்கேயூரம் கட்டப்பட்டு வெளியேறும்போது, நாம் அனைவரும் விதியின் கைப்பாவைகள்.
நீயும் நானும் கையில் வாளோடு எதிரெதிராக நிற்கும் சூழல் இருந்தால் என் உடலை அங்கஹீனம்
செய்யாமல் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்கிறார். முதலில்
நமக்கு இதைப்ப்படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்த சில பகுதிகளைப் படிக்கும்போது,
அந்த வார்த்தை எதிர்காலத்தை ஏறத்தாழ கணித்தபடியே குரு கூறியிருக்கிறார் என்று உணர்கிறோம்.
சோழ
நாட்டின் முதன்மை அமைச்சர் பிரம்மராயரின் மகன்தான் அருண்மொழி. அரசு சைவம் என்றாலும்
முதன்மை அமைச்சரும், அவரது மகனும் வைணவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சைக்கு வரும்
வழியில் தன் அப்பாவைப் பற்றிய நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான் அருண்மொழி. நிறைய
விஷயங்களை தெரிந்துகொண்டதை நினைவுகூர்கிறான். ஆனால் அவன் செல்லும் வழியில் சோழர்படை
மூலம் தடுக்கப்படுகிறான். முதன்மை அமைச்சர் உத்தரவு மூலம் கைதுசெய்யப்பட்டு நகர்காவல்படை
தளபதி மூலம் சிறை வைக்கப்படுகிறான். அரசு எதற்கு உபதளபதியாகும் தகுதி கொண்டவனை கைது
செய்கிறது, அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன என்பதை நாவல் இறுதியில் வெட்டவெளிச்சமாக்குகிறது.
நாவல்
முழுவதும் வாழ்க்கை, மரணம், போர்வாழ்க்கை, வீரனின் வாழ்க்கை, காதல், சங்கப்பாடல், உயிர்கொல்லாமை
என ஏராளமான விஷயங்களை 130 பக்கங்களில் பாலகுமாரன் சொல்லியிருக்கிறார். இதனால் படிக்கும்போது
உங்களுக்கு சலிப்பே ஏற்படாது.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக