காடுகளின் வளத்திற்கும், பாதுகாப்பிற்கும் எறும்புகள் அவசியம்! -









Ant, Brown, Carrying, Egg, White, Tired, Hard, Working

மனிதர்களுக்கு எறும்புகள் அவசியத்தேவை!

ஆராய்ச்சியாளர் கோரி மொரியு

ஆங்கிலத்தில்: ஸ்ரீஜனா மித்ரா தாஸ்

நன்றி: டைம்ஸ் எவோக்

வெப்பமயமாதல் எறும்புகளின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறதா? சாதாரண மனிதர்கள் எறும்புகளை எப்படி பாதுகாப்பது?

வெப்பமயமாதல் பாதிப்பு, மனிதர்கள் எறும்புகளின் புற்றை இடிப்பது ஆகிய காரணங்களால் எறும்புகளும் உலகில் மெல்ல அருகி வருகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் இந்த செயல்முறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளைக் காப்பதிலும் அதனை வளமுறச்செய்வதிலும் எறும்புகள் முக்கியப்பங்காற்றுகின்றன.

எறும்புகளுக்கு என தனித்த பழக்க வழக்கங்கள் குணங்கள் உண்டா?

எறும்புகளில் 15, 000 வகைகள் உண்டு. இதில் சில எறும்புகள் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். சில வகை எறும்புகள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வாழும். காலனியாக இவை வீடமைத்து வாழ்கின்றன. மைர்மெகாலஜி எனும் படிப்பு எறும்புகளைப் பற்றியது. சமூக விலங்காக வாழும் எறும்புகளைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தால் இப்படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

மரங்களுக்கும் எறும்புகளுக்குமான உறவை விவரியுங்கள்.

மரங்களில் ஏறி அதன் சாற்றை குடித்து வாழும் பூச்சிகளை எறும்புகள் வேட்டையாடி அதனை பாதுகாக்கின்றன. அதை தாக்கும் ஒட்டுண்ணிகளை அழிக்கின்றன. பதிலாக தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கிறது. இந்த வகையான உறவின் மூலமே எறும்புகள் இத்தனை ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்து வருகின்றன. எறும்புகள் 140 மில்லியன் ஆண்டுகள் தொன்மையானவை என மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளோம். எங்களுக்குக் கிடைத்த தொன்மையான படிமங்கள் மூலம் இதனை சாதித்துள்ளோம்.

இயற்கைக்கு என்ன விதமாக எறும்புகள் நன்மை செய்கின்றன?

மண்புழுக்களை விட மண்ணை காற்றுபுகச்செய்து வளமாக்குபவை எறும்புகள்தான். இவையே தம் கூடுகளை அமைக்க மண்ணைத் தோண்டி அதன் வளத்தை பெருக்குகின்றன. எறும்புகள் இல்லாவிட்டால் நாம் வாழும் உலகம் இவ்வளவு அழகாக இருந்திருக்காது.

அறிவியல் அதிசயம் என்று எறும்புகளை எதற்காக சொல்லுகிறீர்கள்?

இறக்கைகள் இல்லாத எறும்புகள் பெண் இனத்தைச்சேர்ந்தவை. இவைதான் புற்றுகளை கட்டுவது, அவற்றை வடிவமைப்பது, போர் செய்வது ஆகியவற்றை செய்கின்றன. ஆண்களுக்கு இனப்பெருக்கம்தான் முக்கியப்பணி. ஆண்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடன் இறந்துவிடுகின்றன. காலனியை ராணியாக உள்ள பெண் எறும்பு தலைமையில் வேலைக்கார எறும்புகள் புதிதாக உருவாக்குகின்றன. 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்