உடல் மனம் உள்ளே - உளவியல் குறைபாடுகளும் சிகிச்சைகளும் - தரவிறக்க முகவரி




உடல் மனம் உள்ளே என்ற நூல், பல்வேறு உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சைகள். வழங்கப்படும் மருந்துகளைப் பற்றி பேசுகிறது. பொதுவாக நாம் உடல் அளவுக்கு உள்ளத்தைப் பற்றி பேசுவதில்லை. மனிதர்கள் குழுவாக வசித்தாலும் தனிப்பட்ட மனிதர்களாகவே அவர்களுக்குள் இருக்கிறார்கள். பல்வேறு அடக்கப்பட்ட உணர்ச்சிகள், உடல் குறைபாடுகள், சிறுவயது அனுபவங்கள் ஆகியவை அவர்களின் பிற்கால வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இதன்காரணமாகவே பல்வேறு உளவியல் குறைபாடுகளுள்ள மனிதர்கள் சமூகத்தில் உருவாகிறார்கள். இவர்களுக்கு தேவை சிகிச்சை மட்டுமே. இவர்களைக் கொன்றால் சமூகத்திலுள்ள தீமைகள் அழிந்துவிடாது என்பதை நாம் இன்னும் தெளிவாக உணரவில்லை. அதற்கான விஷயங்களை இந்த நூல் தெளிவுபடுத்தும் என்ற நினைக்கிறேன். 

இந்த நூல் அனைவருக்கும் சென்று சேரவேண்டிய நோக்கத்தில் கிரியேட்டிவ் காமன் உரிமையில் வெளியிடப்படுகிறது. இந்த நூலை தங்களது வலைத்தளங்களில் பகிர்பவர்கள் , அதுபற்றிய தகவல்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு (arapress@protonmail.com)அனுப்பி வைத்தால் நன்றாக  இருக்கும்.  ஆனந்தமாக நூலை தரவிறக்கு வாசியுங்கள். நன்றி.

நூலை எழுத ஊக்கம் தந்த தோழர் பாலபாரதி, கணியம் சீனிவாசன், தமிழ்ஃப்ரீபுக்ஸ் வலைத்தள குழு, இரா. முருகானந்தம், கே.என். சிவராமன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நூலை பீடிஎஃப் வடிவில் தரவிறக்கிக்கொள்ளும் முகவரி


நூலை இபப் வடிவில் தரவிறக்கிக் கொள்ளும் முகவரி









கருத்துகள்