பரதநாட்டியம் என்பது ஒரு வகை மொழி! - பரதநாட்டிய கலைஞர் மாளவிகா சருக்காய்


மாளவிகா சருக்காய், நடனக்கலைஞர்

எந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினமானது?

ஆச்சரிய உணர்வுகளை நடனம் வழியாக வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். நான் இப்போது பயிற்சி செய்து வரும் தயாரிப்பில் இந்த உண்ர்வை பிறருக்கு தெரியும்படி வெளிப்படுத்துவது கடினமாக உள்ளது.

நடனம் சார்ந்த விழாவை தயாரிப்பது என்பது எப்படியிருக்கிறது?

எனக்கு நடனம் சார்ந்த விழாவை தயாரிப்பதற்கு பல மாதங்கள் தேவைப்படும். குறிப்பிட்ட வகை சார்ந்து யோசித்து, குறிப்புகள் எடுத்து அதனோடே வாழ்ந்துதான் நடன நிகழ்ச்சிகளை நான் உருவாக்குகிறேன்.

உங்களுடைய தயாரிப்பில் உருவாகும் நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்.

அர்ஜூனனின் கதாபாத்திரம் எனக்கு பிடித்தமான ஒன்று. அவனின் தத்துவ பார்வை பிறரிலிருந்து அவனைத தனித்துவமாக காட்டுகிறது. உறவுகளைக் கொல்வதா என்ற தயங்கிய அவன் மனம் போருக்கு தயாரானது அனைவரையும் வியப்பூட்டுகிறது. ஆனால் அந்த மாற்றம் உடனடியாக உருவான ஒன்றல்ல. அதைப்பற்றியத்தான நடன நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறேன்.

பரதநாட்டியத்தை எப்படி விளக்குவீர்கள்?

தேவதாசிகள் சதிர் என்ற பாடல்களை பாடி ஆடும் முறை வேறுவகையானது. பின்னர் அதனை ருக்மணிதேவி வேறுவகையாக நடனமுறையாக கட்டமைத்தார். அதில் கதகளி நடனத்திலிருந்து சில அம்சங்களையும் பரதநாட்டியத்தில் இணைத்தார். சந்திரலேகா பிரபுதாஸ் படேல், அதனை தன்னுடைய முறையில் வேறு மாதிரி மாற்றி அமைத்தார்.

நாட்டிய முறையில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?

யாமினி கிருஷ்ணமூர்த்தி, சஞ்சுக்தா பானிகிராகி ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த நடனக்கலைஞர்கள்.

பரதநாட்டியத்தில் உங்களுடைய பாணி என்பது என்ன?

நான் நாட்டியத்தை மொழியாக பார்க்கிறேன். அதில் என்னுடைய பாணி என்று எதனையும் பார்க்கவில்லை.

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

 

கருத்துகள்