பணமோசடி செய்துவிட்டு தப்பியோடும் நண்பர்களின் பரபர பயணம்! - ஹாவா 2018




 

 






Hawaa (2019)
123 தெலுகு

ஹாவா

குற்றமும் அதன்  தொடர்ச்சியாக துரத்தும் பின்விளைவுகளும்தான் கதை.

சார்லி, ஆஸ்திரேலியாவில் சின்ன சின்ன திருட்டுகள், மோசடிகள் செய்து வாழ்கிறான். அவனுக்கு ஒரே ஆதரவு அவனது அக்காவும், பிஜிலி பாபு என்ற ரவுடியிடம் வேலை செய்யும் நண்பன்தான்.

பிஜிலி பாபுவின் பணத்தை பந்தயக்குதிரை மீது கட்டச்சொல்கிறான் சார்லி. அவன் நண்பன் முதலில் மறுத்தாலும் நிறைய லாபம் கிடைக்கும். முன்னர் சார்லி சொன்னபடி பணம் கிடைத்ததால் அதனை ஏற்கிறான். ஆனால் இம்முறை விதி சதி செய்ய, ஒரு லட்சம் டாலர்களை பந்தயத்தில் கட்டி கோட்டை விடுகின்றனர். பிஜிலி பாபுவுக்கு தெரிந்தால் நிச்சயம் கைமா என்ற நிலையில் ஆஸி. யை விட்டு தப்பியோடு சார்லியும், அவன் நண்பனும் நினைக்கிறார்கள். கூடவே சார்லி எதைச் சொன்னாலும் நம்பும் அவனது காதலி திவியும் கூடவே இணைகிறாள். அவள் கூலிக்கொலைகாரன் ஒருவன் கொலைசெய்வதைப் பார்த்துவிட்டு, தப்பியோடி வருகிறாள். கொலைகாரனின் காரையும் திருடிவிடுகிறாள். இவர்கள் மூவரின் வாழ்க்கை என்னவானது, நினைத்தபடியே மூன்றுபேரும் அந்த நாட்டை விட்டு தப்பியோடினார்களா? இல்லையா என்பதுதான் கதை.

அவல நகைச்சுவை என்பது படம் முழுக்க நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறது. சிறிய திருட்டுகளை செய்யும் ஜங்கிஸ் படத்தின் முழு காமெடி கோட்டாவையும் எடுத்துக்கொள்கின்றனர். மற்றபடி பாடல்கள் படத்தில் ஒட்டவே இல்லை.

ஆஹா

படத்தில் நிறைய சுவாரசியமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் ஏதோ டிவி சீரியல் சூட்டிங்கிற்கு வந்தது போலவே சுமாரா நடிக்கிறார்கள். இல்லையெனில் அதிகமாக நடிக்கிறார்கள். காமெடி மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது. நாயகன், நாயகிக்கு படத்தில் பெரிய வேலை ஏதுமில்லை. படம் முழுக்க சாலையில்தான் நடக்கிறது. சேசிங்தான் என்பது சில இடங்களில் சலிப்பூட்டுகிறது. புதிய கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே இருப்பது நல்ல ஐடியா.

ஐயையோ

நாயகி பாத்திரம் பாடலுக்கு மட்டும்தான் டெடிகேட் செய்யப்பட்டிருக்கிறது. தப்பு செய்யக்கூடாது என நாயகனுக்கு போதனை செய்து அனைத்து குற்றங்களிலும் உடனே இருப்பது என்ன லாஜிக் இயக்குநரே? காமெடியா, சீரியசா என புரிபடாமலேயே வில்லன் பாத்திரம் இருக்கிறது.

குற்ற சவாரி!

கோமாளிமேடை டீம்


கருத்துகள்