பிரைவசி பாதிக்கப்படாமல் நோய்த்தொற்றை அழிப்பது கடினம்! - நோய்தடுப்பியலாளர் ஆடம் குசார்ஸ்கி
ஆடம் குசார்ஸ்கி கணிதவியலாளர்
மற்றும் நோய்தடுப்பியலாளர்.
சமூக வலைத்தளத்தில் கிடைத்துள்ள பிரபல்யத்தை பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
டிவிட்டரில் எங்களைப் போன்ற
அறிவியலாளர்கள் சுதந்திரமாக பல்வேறு ஐடியாக்களை சொல்ல முடிகிறது. பெருந்தொற்று காலம்
எங்களைப் போன்றவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம்
மக்களுக்கு இக்காலகட்டத்தில் கடைபிடிக்கவேண்டிய விஷயங்களை எளிமையாக சொல்லமுடிகிறது.
அந்த வகையில் இந்த ஊடகம் முக்கியமானது. நோய்த்தொற்று பற்றிய போலிச்செய்திகளை இம்முறையில்
உடனுக்குடன் தடுக்க முடியும் என்பது நல்ல விஷயம்.
பல்வேறு நாடுகளில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு
பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை சேகரித்து வருகிறார்கள். இது தனிப்பட்டவரின் சுதந்திரத்திற்கு
ஆபத்தானது அல்லவா?
தனிப்பட்ட சுதந்திரத்தை
தியாகம் செய்யாமல் நம்மால் நோய் பற்றிய தகவல்களை அறிய முடியாது. இதுதான் யதார்த்தம்.
எபோலா பற்றிய தகவல்களை தேடியபோது, அது செக்ஸ் மூலம் பரவியது தெரிய வந்தது. இந்த தகவல்களை
மக்களே மனமுவந்து மருத்துவர்களிடம் அரசிடம் தெரிவிப்பார்கள் என்று நம்ப முடியுமா? முடிந்தளவு
தனிபட்ட தகவல்களை மக்கள் அரசிடம் அளிக்குமாறு தொழில்நுட்பத்தை உருவாக்குவது அவசியம்.
நோய்த்தொற்று, பெருந்தொற்று என பல்வேறு வதந்திகள்
சுற்றி வருகிறதே. இவற்றை எப்படி தடுக்கலாம்?
பொதுவாக நோய்த்தொற்று ஏற்படும்
போது மக்கள் பதற்றம், ஆவேசம் கோபம் ஆகிய உணர்ச்சிகளுடன் இருப்பார்கள். காரணம், இந்த
உணர்ச்சிகள்தான் மனிதர்களை இத்தனை ஆண்டுகாலம் பிழைக்க வைத்தது. ஆனால் இப்போது இந்த
தவறுக்கு யார் காரணம் என்று போலியான செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இது தவறானது.
அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக
சொல்வதில்லை. முதலில் நோய்த்தொற்று பெருகியபோது ஆசியாதான் இதற்கு காரணம் என்றார்கள்.
இப்போது ஆப்பிரிக்கா என்கிறார்கள். நோயைத்தடுப்பது முக்கியமா, பழியை யார் மீதாவது போடுவது
முக்கியமா என நாம் யோசிக்கவேண்டிய நேரம் இது.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
ஆங்கிலத்தில்: சோபிதா தர்
கருத்துகள்
கருத்துரையிடுக