பொதுமுடக்கத்தால் கொரோனா வைரஸைக் கொல்ல முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்! ஹர்ஷ்வர்த்தன்
jansatta |
சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷ்வர்தன்
பொது முடக்கம் விலக்கப்பட்டால் கோவிட் -19 பாதிப்பு அதிகரிக்கும்
வாய்ப்பு உள்ளது. அதற்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?
கோவிட் -19 தொற்று பொதுமுடக்க
காலத்திலும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு தீவிரமான
முயற்சிகளை எடுத்து வருகிறது. சிகிச்சை, சோதனைகள், தனிமைப்படுத்தல் வசதிகள் ஆகியவற்றை
இன்னும் தீவிரப்படுத்த முயன்று வருகிறோம்.
அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசிடம் ஆதார
கட்டமைப்பு உள்ளதா?
அரசு இப்போதைய நிலைமையை
சமாளிக்கும்படி பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம்
பேர் மட்டுமே தீவிரமான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள். 80 சதவீதம் பேருக்கு குறைவான
அறிகுறி இல்லாத கோவிட் -19 தொற்று உள்ளது. இதில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் 15 சதவீதம்
ஆகும். தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை படுக்கைகளுக்கான எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
அறிகுறி இல்லாத நோய்த்தொற்று பற்றி விவரியுங்கள்.
இந்த வகை நோய்த்தொற்றை ஆய்வகத்தில்
கண்டுபிடிக்கலாம். கோவிட் -19 நோய்த்தொற்று இவர்களுக்கு இருக்கும். ஆனால் உடலில் அதற்கான
எந்த அறிகுறிகளும் இருக்காது. 130 கோடிப் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்
இதற்கான சோதனை, ஆய்வுகள் என்பது மிகவும் சவாலான ஒன்று. 80 சதவீதம் பேருக்கு இந்த வகையான
நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்களின் தொடர்புகளை பல்வேறு நாடுகளிலும்
கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மூலம் நோய்ப்பரவல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நாட்டிலுள்ள நோய்த்தொற்று இடங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று
பாதிப்பைப் பொறுத்து பொருளாதாரத்திற்கான விதி தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால்
அங்கு ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. மக்களுக்கு நோய்த்தொற்று
பரவலை அரசு அனுமதிக்காது. பொதுமுடக்கம் என்பது நோய்க்கிருமியைக் கொல்லாது. அது நோய்ப்பரவலைத்
தடுக்கத்தான். இந்தக் காலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பு மருந்துகள், ஊசிகள்
ஆகியவற்றை கண்டுபிடிக்கவேண்டியது அவசியம் ஆகும்.
நன்றி: இந்து ஆங்கிலம்
ஆங்கிலத்தில்: பிந்து சாஜன்
பெராபடன்
கருத்துகள்
கருத்துரையிடுக