மக்களுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த குருவின் கதை! - குருதேவ்


இந்த நூலில் பானுமதி நரசிம்மன், தனது சகோதரும் தனது குருவுமான ரவிஷங்கர் பற்றி எழுதியுள்ளார். அவரின் பிறப்பு, கல்வி, தீட்சை பெறுவது, சத்சங்கம் நடத்துவது, ஆசிரம ம் உருவானது. அவரின் பெற்றோரின் வாழ்க்கை. அவர்களின் பங்களிப்பு என பல்வேறு விஷயங்களை இந்த நூல் பேசுகிறது.

உலகிற்கு இன்று தேவையானது அன்பு என வலுவாக பல்வேறு இடங்களில் ரவிஷங்கர் பேசியுள்ளார். வாழ்க்கை பற்றிய பல்வேறு விளக்கங்களையும் அவர் கொடுத்துள்ளார். இதுபற்றி அவரின் சகோதரியே நேரில் கண்டு எழுதுவது நூலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

நூலில் பல்வேறு அதிசயங்களை குரு நிகழ்த்துவது குறைவாகவே இருக்கிறது. அதுவே நூலின் முக்கியமான சிறப்பு. சீடர், பக்தர், மாணவர் ஆகியோரை வரையறை செய்து எழுதிய கட்டுரை முக்கியமானது. மேலும் ஞானத்திற்காகவே குருவிடம் வர வேண்டுமெ ன்று கூறியிருப்பது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு  குரு செல்வதும், அங்கு நேரும் இக்கட்டுகளும் படிக்க பிரமிப்பைத் தருகின்றன.

எளிய மனிதர் அமைதிக்கான தூதராக மாறியதை நேர்த்தியாக நூல் விவரிக்கிறது.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்