நம்பியாரை எம்ஜிஆர் வெல்லும் காதல் கதை! - நம்பியார்




Movie Image Gallery: Nambiar Tamil Movie Image Gallery
movie image gallery




நம்பியார்

இயக்கம் - கணேஷா


படம் முழுக்க உளவியல் சார்ந்து நகருகிறது. நாயகன் அனைவரையும் ஒருவர் ஏன் கோபமாக இருக்கிறார் என்பதை எளிமையாக அவர்களின் உடை, அணிந்துள்ள ஷூக்கள் ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து அதற்கான உபாயங்களை சொல்கிறார். ஆனால் அவரால் தன் தந்தையுடன் சரியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோற்றுக்கொண்டே இருக்கிறார். அச்சூழ்நிலையில் ஒரு பெண்ணுடன் அவர் தற்செயலாக சந்திக்க நேருகிறது. அதனை பெண்ணின் அப்பா பார்த்துவிட்டு தவறாக எண்ணுகிறார். இதனால் இருவருக்கும் மோதலில் சந்திப்பு தொடங்கி காதலில் முடிகிறது. காதலுக்கு மட்டுமல்ல நாயகன் ராமச்சந்திரனின் வாழ்க்கை வில்லனே அவனுடைய எதிர்மறையான எண்ணங்கள்தான். அவை எப்படி அவன் வாழ்க்கையை பலி வாங்குகின்றன, அவன் தன் கனவான ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதினானா? காதலி சரோஜாவை தாஜா செய்து கைபிடித்தானா என்பதுதான் கதை.

ஆஹா

உளவியல் சார்ந்து கதை என்பதை சில நிமிஷங்களில் சொல்லி விடுகிறார்கள். படம் முழுக்க ஸ்ரீகாந்த் செய்வதற்கு எதுவும் இல்லை. முழுக்க சந்தானம் ஆட்சி செய்கிறார். அவர் உடல்பூர்வமாக இல்லாதபோது குரல் மூலமாக வந்துவிடுகிறார். இதனால் ராமச்சந்திரனின் முழுமையான உணர்வு, விஷயங்கள் எடுபடவில்லை.  படத்தில் நாயகன் ராமனுக்கு சாதிப்பதற்கான விஷயம் கூர்மையாக இல்லை. படம் காமெடியாகவே போகிறது. திடீரென அவர் ஐ.ஏ.எஸ் ஆவது, பார்வையாளர்களான நமக்கே படபடக்கிற அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியாக இருக்கிறது. சுனைனா நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். உடனே காதலைச்சொல்லும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு திருவிழாவில் தவறவிட்ட குழந்தை போல எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

ஐயையோ

உளவியல் சார்ந்த கதை. அதுவேதான் ஒருகட்டத்தில் படத்தின் பலவீனமாகிறது. எம்ஜிஆரை விட நம்பியார்தான் படம் முழுக்க வருவதால் நல்ல விஷயங்களை கிளைமேக்ஸில் நான்கு நிமிஷம் பேசினால் போதும் என நினைத்துவிட்டார்கள். படத்தில் நாயகன் துரத்திச் செல்வதற்கான லட்சியம். இந்த பயணத்தில் அடையும் அவமானம் என்று காட்சிகள் வலுவாக இல்லை.  இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி என பெயர் போடாமலிருந்தால் கௌரவமாக இருந்திருக்கும். இப்படத்திற்கு பாடல்களும் தேவையில்லை. சந்தானம் இன்னும் நாலைந்து காமெடி பிட்டுகள் பேசியிருப்பார்.

டோஸ் எக்ஸ்ட்ரா ஆகிவிட்டது

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்