அமெரிக்கா - தாலிபான் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு முக்கியப் பங்குண்டு!


Bannu jailbreak aftermath: Influential Taliban commander calls for ...
express tribune








அமெரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான தூதராக ஜல்மய் காலிஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொது முடக்க காலத்திலும் கூட டில்லிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு பற்றி அவரிடம் பேசினோம்.

உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது?

அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் தோகாவில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆப்கன் அரசும், தாலிபான்களும் தங்களுடைய தரப்பில் கைதாகியுள்ள வீரர்களை விடுவிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை தீவிரவாத செயல்பாடுகளை அந்நாட்டிற்கு எதிராக செய்யக்கூடாது. போர் நிறுத்தம் அரசு, தாலிபன் ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான அம்சங்கள். இந்தியா இந்த ஒப்பந்தம் சார்ந்து முக்கியமான பாத்திரத்தை வகிப்பதால், டில்லியில் இதுபற்றிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவிற்கான பங்கு என்பது வெறும் பேச்சு அளவில் மட்டும்தானா? செயல்பாடுகள் அளவில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா விரும்பவில்லையா?

அருமையான கேள்வி. ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள பல்வேறு மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு இந்தியா நிறைய பங்களித்துள்ளது. ஆனால் உலகளவிலான உறவு என்று வரும்போது இந்தியாவில் பங்கு அதில் குறைவுதான். ஆப்கன் அரசு, தாலிபான் குழு ஆகியோருக்கு இடையில் நடைபெறும் அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்குண்டு. அதற்காகத்தான் டில்லியில் இந்திய பிரதிநிதிகளைச் சந்தித்தேன்.

அமைதி பேச்சுவார்த்தையை இந்தியாவே நடத்தலாமே, இந்த யோசனையை நிராகரித்து விட்டீர்களா?

அப்படியல்ல. நிலப்பரப்பு சார்ந்து இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. ஆப்கன் அரசு, அங்குள்ள அரசியல் சார்ந்து இந்தியா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. இந்த அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்குண்டு. அதை மறுக்கமுடியாது. அதற்காகத்தானே இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த வந்தேன். இந்தியா மனிதநேய உதவிகள், பாதுகாப்பு சார்ந்த உதவிகள், கட்டுமான உதவிகள் என பலவற்றையும் ஆப்கானிஸ்தானுக்கு செய்து வருகிறது. இருநாடுகளுக்குமான தொன்மையான வரலாற்றுத் தொடர்பு உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம்.

அமெரிக்கா மற்றும் தாலிபான் ஒப்பந்தத்தைப் பார்த்தால் அமைதி ஒப்பந்தம் மாதிரி தெரியவில்லையே?

ஆப்கன் மண்ணில் தாலிபான் அல்லது அல்கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். இந்த ஒப்பந்தம் மூலம் அந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும் என்று நினைக்கிறோம். இதன்மூலம் அடுத்து ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாத நடவடிக்கைகள் உருவாகாமல் தடுக்க முடியும். எங்களுக்கு இதைத்தவிர வேறு சிறப்பான வாய்ப்புகள் இல்லை.

ஆப்கானிலுள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. அமெரிக்கா அங்கிருந்து வெளியேறிவிட்டால் அது இந்தியாவுக்கு ஆபத்தாகுமே?

தற்போதைய பாகிஸ்தான் அரசு அமைதி நடவடிக்கைக்கான் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கானில் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறுவது முடிவுக்கு வரும். ஆப்கன், இந்தியா இடையே ஏற்கெனவே நல்லுறவு உள்ளது. இந்த உறவு மேலும் வளரும் என்றே நான் நினைக்கிறேன்.

நன்றி: இந்து ஆங்கிலம்

ஆங்கிலத்தில்: சுஹாசினி ஹைதர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்