இடுகைகள்

கஞ்சா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கானகன் (நாவல்) லஷ்மி சரவணக்குமார்   பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளை

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ்

கஞ்சாவை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்!

படம்
         பெல்ஜியம்  இங்கு 3 கிராம் அளவுக்கு குறைவாக பயன்படுத்துவது குற்றம் கிடையாது என 2003ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுவிட்டது.  நெதர்லாந்து கஞ்சாவை காபி கடைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதி 1976ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர் பயன்பாடாக ஐந்து கிராம் அளவில் பயன்படுத்தலாம். வீட்டில் கூட ஐந்து செடிகளுக்கு மிகாமல் வளர்த்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றலாம்.  போர்ச்சுக்கல்  இங்கு 25 கிராமுக்கு மிகாமல் கஞ்சாவைப் பயன்படுத்தலாம். இதற்கான தடையை அரசு 2001ஆம் ஆண்டு விலக்கிக்கொண்டு விட்டது.  ஸ்பெயின்  இங்கு பொதுஇடத்தில் கஞ்சாவைப் பயன்படுத்த தடை நீடிக்கிறது. மற்றபடி தனிநபராக கஞ்சாவை பயிரிடுவது குற்றமல்ல என 2017ஆம்ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.  இத்தாலி இங்கு மருத்துவம், தொழில்துறை சார்ந்து கஞ்சாவைப் பயன்படுத்த உரிமம் பெறவேண்டும். டிஹெச்சி என்ற அளவு குறைவாக உள்ள செடிகளை வளர்த்த அரசு அனுமதி தேவை இல்லை. நாட்டிலுள்ள மாகாணங்கள் கஞ்சா வளர்ப்பதற்கான விதிகளை தளர்த்த முயன்று வருகின்றன.  மேற்கிந்திய தீவுகள் இங்கு ஐந்து கிராமுக்கும் குறைவாக கஞ்சாவைப் பயன்படுத்தலாம். செடிகளையும் வளர்த்தலாம். ஜமை

காசு, பணம், புகழ், கஞ்சா! - போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்கலாமா?

படம்
    கஞ்சா     உலகில் பல்வேறு நாடுகள் கஞ்சாவை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இதுதொடர்பான குற்றங்கள் குறைவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்களைத்தான் இப்போது நீங்கள் படிக்கப்போகிறீர்கள்..    உலகம் முழுக்க 120 நகரங்களில் கஞ்சா சார்ந்த போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதில் இந்தியாவில் மும்பைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.  2018ஆம் ஆண்டு மட்டும் 3.1 கோடிப்பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 1. 3 கோடிப்பேர் கஞ்சா மற்றும் ஹாஸ் என்ற பொருளை போதைக்காக பயன்படுத்தினர்.  டில்லியில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை சட்டரீதியாக அங்கீகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.725 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.  இந்தியாவில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டம் 1985படி கஞ்சாவை பயன்படுத்துவர்களுக்கும், அதைச் சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.  கஞ்சாவில் டெராஹைட்ரோகன்னாபினோல் என்ற பொருள் உள்ளது. இதுவே இதனை உட்கொள்பவர்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கஞ்சாவில் 400க்கும் மேற்பட்ட பகுதிப்பொருட்கள் உண்டு.இதிலுள