இடுகைகள்

நேர அட்டவணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிவி, ரேடியோவுக்கு முன்னதாக நேரம் எப்படி அறிந்தோம்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டிவி, ரேடியோ கண்டுபிடிக்கப்படும் முன்னர் நேரம் எப்படி அறிந்தோம்? சூரியனின் நிழலை வைத்து நேரம் அறிந்தோம். நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறாதீர்கள். இது தோராயமான கணக்கு. துல்லியமான நேரம் ரயில்களுக்கு தேவை. எனவே, தந்தி கண்டறியப்பட்டவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப சிக்னல்கள் அனுப்பப்பட்டன. 1830 ஆம் ஆண்டு மின் தந்தி வந்தபின் நேரம் குறித்து ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்புவது எளிதானது. பின் பல்வேறு நிலப்பரப்பு சார்ந்த இடங்களுக்கு சூரியன் வருவதையொட்டி ரயில்வே நேர அட்டவணை உருவானது. பல மாநிலங்கள் இங்கிலாந்தில் கூட நேர அட்டவணையை மாற்றிக்கொள்ள மறுத்தனர். 1880 ஆம் ஆண்டு பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு நேர அட்டவணையை மக்கள் ஏற்றனர். நாடு முழுக்க ஒரே நேரம் அமலானாது. நன்றி: பிபிசி

நேரத்தை மாற்றினால் இந்தியாவுக்கு 29 ஆயிரம் கோடி லாபம்!

படம்
இந்தியாவுக்கு நஷ்டம் 29 ஆயிரம் கோடி! மாலிக் ஜக்னானி செய்தி: இந்தியாவில் ஒரே காலநேர அட்டவணையைப் பின்பற்றுவதால் ஆண்டுதோறும் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கார்னெல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தகவல் கூறியுள்ளது. கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி தனது (PoorSleep: Sunset Time and Human Capital Production) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே இந்திய காலநேர அட்டவணையால் ஆண்டுதோறும் பெருமளவு நிதியிழப்பு ஏற்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தினசரி மாலைவேளையில் மேற்குப்புற இந்தியாவை விட கிழக்குப்புற இந்தியாவில் 90 நிமிடங்களுக்குப் பிறகே சூரியன் மறைகிறது. ஒரே காலநேரத்தைப் பின்பற்றும்போது கிழக்குப்புற மக்களுக்கு 90 நிமிடங்கள் தூக்க இழப்பு ஏற்படுகிறது. ”உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இதன் அளவு 0.2 சதவீதம். மொத்தமாக வீணாகும் மனிதவளத்தின் மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் ” என திகைக்க வைக்கிறார் ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி. காலநேர அட்டவணை ரயில்வே மற்றும் விமான சேவைகளுக்காக உலகமெங்கும் 24 காலநேர அட்டவணைகள் செயல்பாட்டில் உள்