இடுகைகள்

சித்திரவதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குழந்தைகள் கேலி சித்திரவதையில் ஈடுபடுவது எதற்காக? உளவியல் ரீதியாக சில குழந்தைகள் எதிர்பார்த்த அங்கீகாரம், அன்பு கிடைத்திருக்காது. கோபம், ஆக்ரோஷன், வன்முறை மூலம் தங்களுக்கான புகழை, பெருமையை அடைய முயல்கிறார்கள் இதன்பொருட்டே கேலி சித்திரவதையை தொடங்குகிறார்கள். பள்ளிகளில் மாணவிகளில் சிலரும் இதுபோல கேலி சித்திரவதையை செய்து புகழ்பெற முயல்வதுண்டு. அதெல்லாமே வெட்டிப்பெருமைதான். மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர் இப்படி பிறரை கேலி சித்திரவதை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஏற்க கூடாது. முறையாக புகார் அளித்து பாதிக்கப்படுபவர்களை காக்க முயலவேண்டும். இதன் வழியாக கேலி சித்திரவதை குறையும்.  குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்? சில பெற்றோர்கள் குழந்தையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்பவர்களுக்கு சுய நம்பிக்கை, துணிச்சல், தைரியம் இருக்காது. தன்னம்பிக்கை குறைவாக, கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள். இப்படியானோரை பள்ளியில் கேலி சித்திரவதை குழு அடையாளம் கண்டு அடித்து துன்புறுத...

வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

      வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...

சிறுமிகளை, இளம்பெண்களை சித்திரவதை செய்த அரச குடும்பத்துப் பெண்மணி

படம்
  எலிசபெத் பாத்தோரி ஹங்கேரியைச் சேர்ந்த அரச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். ராணுவத்தில் எலிசபெத்தின் அப்பா வேலை செய்தார். அந்த நாட்டில் மரியாதையான குடும்பமாக இனக்குழுவாக இருந்தது. மன்னர், நீதிபதி, பாதிரியார்   என்றெல்லாம் பதவி வகித்தவர்கள் பின்னாளில் சாத்தானை வழிபடுபவர்களாக, தாந்த்ரீகத்தில் ஈடுபடுபவர்களாக மாறினர். அந்த சமயத்தில் பிறந்த எலிசபெத், அவரது மாமாவால் பிறரை வருத்தி துன்புறுத்தி மகிழ்வதை ரசிக்கத் தொடங்கினார். பதினொரு வயதில் எலிசபெத்திற்கு திருமணம் நிச்சயமானது. பதினைந்து வயதில் மணம் செய்து கொடுக்கப்பட்டார். கணவரும் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்தான். கணவர் வீட்டில் இல்லாதபோது தான் வாழ்ந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். பிறகுதான், அங்கேயும் தனது பிறந்த வீட்டில் இருப்பதைப் போலவே சித்திரவதை செய்யும் அறைகளை கட்டி, கருவிகளை அமைத்துக்கொண்டார். நோ ஸ்டேட்மென்ட்ஸ் ஒன்லி ஆக்சன் என களமிறங்கிய எலிசபெத், அருகிலுள்ள கிராமங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என சொல்லி படிப்பறிவு இல்லாத சிறுமிகளை, இளம்பெண்களை அழைத்து வந்தார். இப்படி வந்தவர்கள் யாரும்...

வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

படம்
    இஸ்தான்புல்  புர்கான் சென்மெஸ் துருக்கி நாவல் தமிழில் முகமது குட்டி காலச்சுவடு இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது. நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான். நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வே...

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ர...

சித்திரவதைகளை படம்பிடித்தால் மகிழ்ச்சி!

படம்
  புகைப்படம் எடுப்பது..... தேவையான நபர்களை பின்தொடர்ந்து கடத்தி கொல்வதில்தான் பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் ஈடுபடுவார்கள். அதனை ஆவணப்படுத்தி பிவிஆர் சினிமாஸில் பின்னாளில் திரையிடலாமே என யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி வல்லுறவு செய்யும் சைக்கோ கொலைகார ர்கள், தங்களது சித்திரவதைகளை ஆவணப்படுத்துவார்கள். புகைப்படம், வீடியோ, ஆடியோ  என பலவாறாக பதிவு செய்து தங்களது செயல்களை தாங்களே பார்த்து சபாஷ்டா மாப்ளே என சொல்லிக்கொள்வார்கள்.  இதில் முக்கியமான பிரச்னை, இப்படி ஆவணப்படுத்தும் பழக்கம் ஆபாசப் படங்களை விரும்புபவர்கள்தான் செய்வார்கள். இவர்களின் பாலியல் வல்லுறவு வன்முறையின் உச்சகட்டமாக இருக்கும். இதனை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டால் போதும். ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை என இரண்டே வாய்ப்புகள்தான்  நீதிபதிக்கு இருக்கும். அவர் பெரும்பாலும் சாகும்வரை சிறை என்பதை தேர்ந்தெடுப்பார்.  இயான் பிராடி, மைரா என்ற இருவருக்கும் ஹிட்லரின் மெயின் கெம்ப் நூல் பிடிக்கும். அதில் வதை முகாம்கள் எழுதப்பட்ட பகுதிதான் அவர்களது விருப்பம். இத...

சீரியல் கொலைகாரர்களின் பல்வேறு கொலைசெய்யும் முறைகள், பாணிகள்!

படம்
          வெர்ஸெனி இத்தாலியைச் சேர்ந்தவரான வெர்ஸெனி 1849இல் பிறந்தவர். சிறுவயது முதலே கோழிகளை கழுத்தை நெரித்து கொல்வதில் சந்தோஷம் கொண்டார். அது அப்படியே தொடர ஏராளமான கோழிகளை அடித்து கொன்று மகிழ்ந்தார். இதனை இவர்தான் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின்னர், சிறுவனாக இருக்கும்போது இவரது கவனம் இளம்பெண்கள் மீது திரும்பியது. தனக்கு தெரிந்த பெண்களை எல்லாம் தாக்கத் தொடங்கினார். அப்போது செய்தது கொலை முயற்சிதான் என்றாலும் அது நிறைவேறவில்லை. பிறகு, பதினேழு வயது பெண் ஜோகன்னா என்ற பெண்ணை காலையில் பின்தொடர்ந்து சென்று தாக்கினார். கழுத்தை நெரித்து கொன்றவர், வயிற்றிலுள்ள குடல்களை உருவினார். உடலை முழு நிர்வாணப்படுத்தியவர், காலிலுள்ள தசைகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். அதில் ஒரு பகுதியை சமைக்க எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இப்படியே இன்னொரு பெண்ணையும் கொன்றார். அடுத்து சொந்தக்கார பெண்ணை கொல்லும் முயற்சியில் அவள் கெஞ்சியதால் உயிரோடு விட்டார். அதனால் காவல்துறை வெர்ஸெனியை கைது செய்தது. குற்றங்களை செய்தாயா என்றதும் ஆமாம் என ஒப்புக்கொண்டார். குடல், த்தசைகளை எதற்கு எடு...

தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

படம்
            பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் ! நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும் , தொடக்கத்தில் அப்படி இல்லை . கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும் . அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு . ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது ? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது . ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ . நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை . அதனால்தான் , புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன . டிரெபான் இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும் . ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும் . ஆனால் கி . பி .6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள் . அதற்கான கருவிதான் டிரெபான் . தலை...

கொலைகாரக்கருவிகளும் கண்டறியப்பட்டவைதான்!

படம்
                புதிய சாதனங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன . அதற்கான கண்டுபிடிப்புகள் நடந்த அதேசமயம் . மதத்திற்கு எதிராக நடைபெறும் அறிவியல் புரட்சிகளை ஒடுக்க பல்வேறு கொடூரமான கருவிகளை மதவாதிகள் கண்டுபிடித்தனர் . இதனால் பல்வேறு கொடூரமான கருவிகள் உருவாயின . அரசுக்கு எதிரானவர்கள் , மதத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் , கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் என அனைவரையும் பயத்தின் பிடியில் வைக்க ஏராளமான கொலைக்கருவிகள் , சித்திரவதை சாதனங்கள் உருவாக்கப்பட்டன . அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . காளைக்குள் கொதிகலன் குற்றவாளியை உலோகத்தில் உருவான காளையின் வயிற்றுக்குள் இறக்கிவிடுவார்கள் . அதன் வயிற்றின் கீழே நெருப்பை மூட்டினால் என்னாகும் ? உள்ளே இருப்பவர் உயிரோடு ரோஸ்ட் ஆவார் . மரணம் உறுதி . ஆனால் அதனை ரசிக்கும் விதமாக செய்யவேண்டுமே ? மரண பயத்தில் அலறுபவரின் குரல் வெளியே டிடிஎஸ் ஒலியில் கேட்கும்படி செய்வதற்கான ஒலி அமைப்பு காளையில் கழுத்து பக்கம் அமைக்கப்பட்டிருந்தது . இந்த ஒலி விலங்கின் உறுமலாக கேட்கும் . இதனை பெரிலஸ் என்று க்ரீஸ் நாட்டு கண்டுபிடிப்ப...

அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்

படம்
                  லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா பிரன்ட்லைன் திவ்யா திரிவேதி லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள் ? உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள் . இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும் . அதில் வரும் செய்திகள் எப்படி , யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா ? அதுபோலதான் இதுவும் . என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை . திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர் . வழக்கு , சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது . ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர் . புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன . இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் த...