அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்
லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி
எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா
பிரன்ட்லைன்
திவ்யா திரிவேதி
லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள்?
உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள். இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும். அதில் வரும் செய்திகள் எப்படி, யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா? அதுபோலதான் இதுவும். என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை. திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர். வழக்கு, சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது. ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர். புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன. இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் தூண்டுதல்தான்.
அப்போது இந்துகள் ஆபத்தில் இல்லையா?
அவர்களுக்கு ஆபத்து என்பது ஒட்டுமொத்த இந்து பெண்களும் முஸ்லீம்களை திருமணம் செய்துகொண்டால்தான் நடக்கும். எப்போதாவது நடக்கும் காதல் திருமணங்களை வைத்து இந்துக்களுக்கு ஆபத்து என அலறுவது சரியல்ல. சட்டங்கள் மூலம் திருமணங்களை தடுத்தால் என்னாகப்போகிறது. மனிதர்களின் உணர்வுரீதியான பந்தம் எப்போதும் மாறாது. அதனை சட்டங்கள் மாற்றமுடியாது.
பன்மைத்துவம் கொண்ட கலாசார தேசத்தில் பிரிவினை பற்றி நீங்கள் உங்கள் நூலில் எழுதியிருக்கிறீர்கள்?
முஸ்லீம் பெண் பகவத் கீதை மனப்பாடமாக சொல்கிறாள். அவள் பார்வையற்றவள். இதற்காக சங் பரிவார் அவளைப் பாராட்டி விருது கொடுத்தது. அதேவேளை இந்துப்பெண் குரானை பாராயணம் செய்தால் விருது கொடுப்பார்களா? இதேபோல அமிதாப் பச்சனுக்கும் நடந்தது. அவரின் நிகழ்ச்சியில் 1927, அக்டோபர் 25 அன்று அம்பேத்கரும் அவரது தொண்டர்களும் எந்த புனித நூலை கொளுத்தினர் என்று கேள்வி கேட்டதற்காக இந்துக்களின் மனம் புண்படுகிறது என இந்துஅமைப்புகள் வழக்கு தொடுத்தன.
நான் இதைப்பற்றி மட்டுமல்ல, இல்லாத அபாயத்தை இருக்கிறதென நம்ப வைக்க முயலும் சக பத்திரிக்கையாள நண்பர்களைக் கூட கடுமையாக விமர்சித்துள்ளேன்.
நீங்கள் கூறுவது சரி. பாஜக பல்வேறு விஷயங்களை மாற்றிக்கூறினாலும் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளதே?
நீங்கள் குறிப்பிட்ட நோக்கத்தை மக்களிடம் பரப்ப நினைக்கிறீர்கள். இதனால் வரலாறு, அறிவியல் என அனைத்து துறைகளிலும் உங்கள் கருத்தை தேவைக்கேற்ப வெட்டி ஒட்டி பிரசுரிக்கிறீர்க்ள். எதற்காக இப்படி செய்கிறீர்கள்? தேர்தலில் வெற்றி பெறவேண்டும் அவ்வளவுதான். திருமணங்கள் என்பதை மதம் என்பது தடுக்கவில்லை. பஞ்சாப் இந்து பெண் அமெரிக்க மென்பொருள் பொறியாளருக்கு மணம் செய்துகொடுக்கப்படுகிறாள். பின்னர்தான். அவன் பொறியாளர் அல்ல கார் ஓட்டுகிற குடி நோயாளி என்று தெரிகிறது. இதன் அடிப்படை தெரியாத அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை மத பிரச்னையாக மாற்றுகிறார்கள்.
லவ் ஜிகாத்தை மனதில் வைத்து புத்தகம் எழுதுவதற்கு எப்படி தோன்றியது?
நான் மீரட்டில் அலுவலகப் பயணமாக சென்றேன். அப்போது அங்கு லவ் ஜிகாத் வார்த்தையை கேட்டேன். அங்கு அப்படி ஏழு வழக்குகள் நடந்து வந்தன. இதனை சங் பரிவார் பிரபலப்படுத்தியது. இந்து ஆண்களை முஸ்லீம்கள் பெண்களும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்து பெண்களை முஸ்லீம்கள் மட்டும் திருமணம் செய்யவில்லை. அங்கு பொதுவாகவே பல்வேறு இன மக்கள் வாழும் பகுதி. எனவே பல்வேறு சாதிகளும், மதங்களும் கலந்து திருமணம் செய்வது வழக்கமானதுதான். இது சுவாரசியமாக பட்டதால் கௌரக்சா, கர்வாப்ஸி, லவ் ஜிகாத் ஆகியவற்றைப் பற்றி ்நான் நூல் எழுதலாம் என்று யோசித்து முடிவுக்கு வந்தேன்.
அரசு உருவாக்கிய சட்டம் சாதி மறுப்பு திருமணங்களை பாதிக்குமா?
காதல் நெருப்பு போல. அதனை யாரும் நிறுத்தி வைக்க முடியாது. அதனை அறிந்திருந்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி. அரசியலமைப்புரீதியான இதுபோன்ற சட்டங்கள் நீதிமன்றத்தில் நிற்காது.
முகலாய மன்னர் அக்பர் கூட இந்து பெண் ஜோதா பாயை திருமணம் செய்துகொண்டார். அவரது மகன்தான் ஜஹாங்கீர். ஜோதா பாய்க்கு பதேபூர் சிக்ரியில் பெரிய மாளிகை உண்டு. அங்கு ஒரு அறையை கோவிலாக மாற்றியிருக்கிறார்கள். அவர் இந்து மதத்தைத்தான் கடைப்பிடித்தார். இதுபோல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். முஸலீம்கள் கூட இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இயங்கியிருக்கிறீர்கள். யூசுப்கான் என்பவர்தான் இந்தியில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார். அமீர்கான், சயீப் அலிகான், ஷாரூக்கான் ஆகியோர் இந்துபெண்களைத்தானே திருமணம் செய்திருக்கிறார்கள். இப்போது திடீரென அரசு தடுக்கவேண்டும் என ஏன் நினைக்கிறது?
கருத்துகள்
கருத்துரையிடுக