பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

 

 

 

 Cows, Animals, Nature, Farm, Baby Animals, Zoo, Outdoor

 



மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது. அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன. இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது, விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார். இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான்.


புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும். பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது, மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது. இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன.விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர்.


காங்கிரஸ் கட்சித்தலைவர் சித்தராமையா, மதப்பிரிவினர்களுக்கு இடையில் இது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றவர், தலித் மற்றும் பிற்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்று கூறியுள்ளார். மத்திய அரசு கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் இதேபோல தடையை உருவாக்க முடியுமா என்று கேட்டுள்ளார். ஆனால் பிற காங்கிர ஸ் தலைவர்கள் புனித பசு தொடர்பாக எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. தேர்தல் வாக்குகளை எண்ணி அமைதியாக இருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். பசு கொட்டில்களை அமைத்து காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் வந்தால் அதற்கான நிதி மக்களுடையதுதானே செலவிடப்படும் என்ற கோணமும் விவாதிக்கப்படுகிறது.

Man, Cattle, Animals, Cows, Bulls, Calves, Mammals

பசுக்களை கொல்லக்கூடாது என அரசு சட்டம் கொண்டுவந்தால் அது லைசென்ஸ் ராஜ் மற்றும் ஊழலை ஊக்குவிக்கும் என என முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.


2019ஆய்வுப்படி இந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை 302.79ஆக உள்ளது. 2012யை வடி ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. 142.11 மில்லியன் நாட்டு மாடுகள் உள்ளன. 50.42 மில்லியன் அளவுக்கு கலப்பு மாடுகள் உள்ளன. 109.85 மில்லியன் எருமைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நாம் பசுக்களை பாலுக்கு மட்டும் நம்பியிருப்பதை கைவிட்டு வெளியே வரவேண்டும். அதன் சாணி பல்வேறு சத்துகளைக் கொண்டது என்கிறார் நாக்பூரைச் சேர்ந்த சுனில் மன்சிங்கா. இதன் சாணியில் இருந்து பஞ்சகாவ்யா தயாரிக்கலாம். அது கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என அடுக்கிக்கொண்டே போகிறார்.

Livestock, Cows, Cattle, Animals, Farm, Feeding, Eating

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஜோசப் இயற்கை விவசாயத்திற்காக கூட்டுறவு சங்கத்தை தொடங்கியுள்ளார். இந்த சங்கம் கர்நாடகத்தின் 15 மாவட்டங்களில் செயல்படுகிறது. இவர் பால், மாட்டிறைச்சி ஆகியவற்றை தீவிரமாக எதிர்க்கிறார். பால் என்பது மனிதர்களுக்கானது அல்ல. அதனை நாம் செரிக்கும் விதத்தில் இல்லை. மேலும் சிவப்பு இறைச்சி சாப்பிடும் மாநிலங்களில் வயிறு, குடல் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற தகவல்களை இப்போது கேட்டு வருகிறோம் என்று பேசுகிறார். வெளிநாட்டு பசுக்களான ஹோல்ஸ்டீன் ஃப்ரீஸியன், ஜெர்சி ஆகிய மாட்டினங்கள் அதிக பாலை உற்பத்தி செய்கின்றன. இவை பால் தரும் எந்திரங்களாகவே பார்க்கப்படுகின்றன என்று பேசுகிறார். பதப்படுத்த பால் வேதிப்பொருட்கள் சேர்க்கப்டடுவதால், அதைக் குடிக்கும் பெண்களுக்கு விரைவில் வயதுக்கு வரும் சிக்கலும் ஏற்படுகிறது. பாலை கறப்பவர் நேரடியாக அதனை வாடிக்கையாளருக்கு விற்பதே சிறந்தது என இறுதி தீர்மானமாக பேசுகிறார். இதற்கெனவே பல்வேறு நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகி்ன்றன. உத்தர்காண்டைச் சேர்ந்த நீரஜ் சௌத்ரி தனது ஶ்ரீபான்சி கௌ தாம் எல்எல்பி நிறுவனம் மூலம் பசு சாணியில் தயாரான செருப்பு, டைல்ஸ், கடிகாரம், செல்போன் கவர், விளக்கு, சிலைகள், எலக்ட்ரானிக் பொருட்களை விற்று வருகிறார். இவரும் பசுமாட்டில் பால் சார்ந்த வணிகம் நிறுத்தப்படவேண்டும். கால்நடை பண்ணை சார்ந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். டெவில் இன் தி மில்க் என்ற நூலைப்படித்து இத்தொழிலில் ஊக்க்ம பெற்றுள்ளார்.


பரேலியிலிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் குறுகியகால படிப்பைப் படித்துள்ளார். பின்னர் ஐஐஎம் காசிப்பூரில் படித்தவர் தொழிலுக்கு வந்துவிட்டார். இவர் சாமி சிலைகளைக் கூட பசு சாணியில் உருவாக்கி விற்று வருகிறா்ர். இதற்காக கிராமத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.


மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு பசு அமைச்சரவையில் இவரும் ஒரு அங்கம்.

ரமேஷ்பாய் ரூபரேலியா கதை இ்ந்தி சினிமாவைப் போலவே உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிதி மந்த நிலையில் வேலை இழந்துபோக நிலத்தையும் நகையையும் விற்றுவிட்டார். பின்னர் குடும்பம் சாப்பிட, 2010இல் பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெங்காயம் பயிரிட்டார். அதற்கான உரத்திற்கு ஒரு பசுவும் இரண்டு காளைகளும் உதவிக்கு இருந்தன. இதில் வருமானமாக கிடைத்த 35 லட்ச ரூபாயைப் பயன்படுத்தி கொண்டல் கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கினார். இப்போது அங்கு பசு கொட்டில்களை நடத்திவருகிறார். 130 நாடுகளுக்கு 80 பசு சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்துவருகிறார். இவரது ஆண்டு வருமானம் 3 கோடியாக உள்ளது. மொபைல் ஆப் வழியாகவும், யூடியூப் மூலமும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். கிர் ரக பசுக்களை வளர்த்து தனது பொருட்களுக்கான மூலப்பொருட்களை பெறுகிறார். நாட்டு மாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக கோபாலக்ஸ் எனும் பசுக்களை இனச்சேர்க்கை செய்வதற்கான சேவையையும் நடத்தி வருகிறார்.

Animals, Asia, Buffalo, Cambodia, Cow, Farm, Farmer 

ராஜஸ்தானைச் சேர்ந்த பீம்ராஜ் சர்மா, பசு சாணியில் காகிதங்களை தயாரிக்கிறார். கௌகீர்த்தி எனும் இவரது நிறுவனம் நோட்டு, புத்தகங்களை தயாரித்து இந்தியாவில் விற்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்திற்கும் ஏற்றுமதி செய்கிறது. எட்டாயிரம் பசுக்களை வளர்ப்பவருக்கு ஆண்டு வருமானம் ஒரு கோடி கிடைக்கிறது. ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பு மத்திய அரசினுடையது. இந்த அமைப்பு பசுக்களைப் பற்றிய விழிப்புணர்வுக்காக ஆன்லைன் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.


2017இல் பசுக்களுக்கான சரணாலயம் மத்திய பிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. ராஜஸ்தான் பிக்கனெரில் பசு சரணாலயம் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பசுக்களின் சாணி, கோமியத்தை வைத்து பல்வேறு பொருட்களை தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.


தி வீக்


பிரதீமா நந்தகுமார்

images - pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்