ஜோபைடன் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே வாய்ப்பு அதிகம்! - மைக்கேல் குஜெல்மேன்

 

 

 

 

 

India citizenship law extremely 'discriminatory' says ...

 

 

மைக்கேல் குஜெல்மேன்

தெற்காசியாவுக்கான வில்சன் சென்டர் துணை இயக்குநர்


அமெரிக்க அதிபராகியுள்ள ஜோ பைடனுக்கு அடுத்துள்ள சவால்கள் என்ன? அவர் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்?


பைடன் இப்போதைக்கு உள்நாட்டில் உள்ள அவசரகால நிலைமையை கவனிக்க வேண்டும். இப்போது பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விஷயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. அவை, பெருந்தொற்று, பொருளாதாரம், இனவெறி, பருவச்சூழல் ஆகியவையாகும். இவற்றை எக்சிகியூட்டிவ் ஆர்டராக பைடன் கையெழுத்திட்டு செயல்படுத்த உள்ளார்.


அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டம், பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குடியேறுவதற்கான தடை ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார். இதனால் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவில் உருவாக்கப்படாமல் போகவில்லை. அவர்கள் விரைவில் பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் இணைய உள்ளனர். அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் மேலும் பல்வேறு ஆணைகள் செயல்பாட்டிற்கு வரும். உள்நாட்டுப் பாதுகாப்பு, குவான்டினாமோ சிறை மூடல் ஆகியவற்றையும் இதில் இணைப்பார்கள். ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்தி தீவிரவாதத்தைக் களைவது பற்றியும் நடவடிக்கை எடுப்பார்கள். தெற்காசியாவுக்கு முக்கியமான தீர்மானம் இது. ஜனநாயகம் காப்பதற்கான மாநாட்டு முயற்சிகளையும் எடுக்கலாம்.


ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா என்ன முடிவு எடுக்கும்?


ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்குள்ள தீவிரவாத குழுக்கள் அல்கொய்தாவுடன் தொடர்புகொண்டிருக்கும் வரை அங்குள்ள அமெரிக்க படைகளை பைடன் திரும்ப பெறுவது கடினம். இதில்தான் டிரம்பும் பைடனும் வேறுபடுகிறார்கள். அடுத்து, பாகிஸ்தான் விவகாரத்தில் பெரியளவு மாற்றம் இருக்காது. இந்தியாவில் ஊடுருவும் பாக் தீவிரவாத குழுக்களை கருப்பு பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இத்தடை தொடருவது அந்நாடு இனிவரும் நாட்களில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பொறுத்ததே. கருப்பு பட்டியலில் உள்ள குழுக்களை அதிலிருந்து விடுவிக்க பாக். அரசு முயன்றால் இருநாட்டு உறவும் பரபரப்பானதாக மாற வாய்ப்புள்ளது.


சீனாவின் மீதான கொள்கை எப்படி அமைய வாய்ப்புள்ளது?


பைடன், சீனாவை அமெரிக்காவிற்கு எதிரான சக்தியாகவே பார்க்கிறார். ஆசியாவில் இந்தியாவுக்கும் ஆபத்தான முறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடு சீனா. அமெரிக்கா சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு ஆதரவு அளிக்காது. இந்த வகையில் இந்தியாவின் எல்லைப் பிரச்னைக்கு சீனாவின் புறமாக அமெரிக்காவின் கரம் ஆதரவாக நீளாது. இது இந்தியாவுக்கு பலம். மேலும் பாகிஸ்தான் பொருளாதார அமைப்பு தொடர்பான திட்டங்களையும் அமெரிக்கா உறுதியாக எதிர்க்கும். இந்தியாவுக்கு பல்வேறு உளவுத்துறை தொடர்பான உதவிகளை அமெரிக்கா வழங்கும். பாதுகாப்பு இல்லாத வேறு விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது. அதாவது சூழல் விவகாரங்களில். டிரம்ப் அரசை விட கொஞ்சம் மென்மையாக பைடன் நடந்துகொள்ள வாய்ப்புள்ளது.


இந்தியாவுடன் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு எப்படி நடந்துகொள்ளும்?


அமெரிக்காவில் ஆட்சி மாறி யார் வந்தாலும் இந்தியாவுடன் பெரிய முட்டல் மோதல் ஏதும் ஏற்படாது. இருநாடுகளுக்கு இடையிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தாராள ஒப்பந்தம் பொறுத்தவரை அதன் இந்தியாவின் மீது அவர் திணிக்க மாட்டார். ரஷ்யாவுடனான ஏவுகணை ஒப்பந்த த்திற்காக குறைந்த அளவில் பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி ஆற்றல், இணைய பாதுகாப்பு, ஐடி, பொதுசுகாதாரம் ஆகியவற்றில் இருநாட்டு உறவுகளும் சிறப்பாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.





கருத்துகள்