எனக்கு ஆர்சனிக் நச்சூட்டப்பட்டது பற்றி அரசு அமைப்புகள் அமைதியாக இருப்பது தவறானது! - இஸ்ரோ ஆலோசகர் தபன்மிஸ்ரா
தபன் மிஸ்ரா
இஸ்ரோ ஆலோசகர்
2017ஆம்ஆண்டு மே 23 அன்று இஸ்ரோ நிறுவன ஆலோசகரான மிஸ்ரா, பெங்களூருவிலுள்ள நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் ஆர்சனிக் நச்சு கலக்கப்பட்டிருந்தது. இப்படி மூன்று முறை அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டது. மேலும் அவர் குடியிருந்த வீட்டில் வளாகத்திற்குள்ளும் பாம்புகள் விடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பீதியில் வாழ்ந்துவருகிறேன் என ஊடகத்தில் கூறியுள்ளார் தபன் மிஸ்ரா.
விஷத்தால் பாதிக்கப்பட்டவரான நீங்கள்மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
எனக்கு பைல்ஸ் பிரச்னை உள்ளது. எனது ஆசனவாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதற்கு மருந்துகளை தந்தார்கள். ஆனால் அது கேட்கவில்லை. சந்திப்பு நிறைவுபெற்றதும் நான் அகமதாபாத் சென்றுவிட்டேன். என்னால் நடக்கவே முடியவில்லை. இண்டிகோ விமானத்திலுள்ள பணியாளர்கள் எனக்கு உதவினர். அடுத்தநாள் ஸைடஸ் மருத்துவமனைக்கு நான் சென்று சிகிச்சை பெற்றேன். சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டிருந்தால் நான் உறுப்புகள் செயலிழந்து இறந்துபோயிருப்பேன்.
இதுபற்றி அரசின் விசாரணையைக் கோரினீர்களா?
அரசின் அனைத்து நிலைகளுக்கும் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். நான் என்னுடைய நிலை பற்றிய ரகசியம் காத்தேன்.
இஸ்ரோ இதுபற்றிய விசாரணை செய்ததா?
எனக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. அங்கு நடந்த விசாரணை என்பதே கேலிக்கூத்து. பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் நடக்கும் விசாரணையை நீங்கள் எப்படி விசாரணை என்று கூறுவீர்கள்? ஆனால் மத்திய புலனாய்வு அமைப்புகள் இதனை வழக்காக எடுத்து விசாரிக்கின்றன. நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்கின்றன.
அரசு இந்த விவகாரத்தில் சரியாக செயல்பட்டது என நினைக்கிறீர்களா?
நான் அரசைக் குறைசொல்ல விரும்பவில்லை. இதை கவனமாக கையாளவேண்டும். அவர்கள் என்னை சிறப்பாக கவனித்துக்கொண்டார்கள். நீதிமன்ற வழக்கைப் பொறுத்தவரை நடந்துவருகிறது. இதைப்போலவே நம்பி நாராயணனுக்கு நீதி 26 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது. அவருக்கு பத்மபூஷன் விருது அளித்துவிட்டு நஷ்ட ஈடாக ரூ50 லட்சம் அளிப்பது வேறுபட்டது. நீதி தாமதமாக கிடைப்பது நீதி மறுக்கப்பதற்கு ஒப்பானதுதான்.
அரசு உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
அரசு எனக்கு விடுக்கப்ட்ட ஆபத்தை நீக்கவேண்டும். நம்பி நாராயணனைப் போல சட்டப்போராட்டம் நடத்த என்னிடம் வசதியில்லை. அப்படி வழக்கு நடத்த நான் மக்களிடம்தான் நிதி சேகரிக்கவேண்டும்.
இந்திய அமெரிக்கர் உங்களுக்கு விஷமிட்டதைக் கூறக்கூடாது என்று கூறினீர்கள். யார் அவர், அவரின் தேவை என்ன?
அவருக்கு இஸ்ரோவிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் தெரியும். எனக்கு குழப்பமாக இருப்பது அவர் அமெரிக்காவிலிருந்து என்னைச் சந்திக்க வந்திருந்தார். எனக்கு நச்சு கொடுக்கப்பட்ட விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
நீங்கள் இந்த மாதம் வேலையை விட்டு ஓய்வு பெறப்போகிறீர்கள். நச்சு கொடுக்கப்பட்டதைப் பற்றி இப்போது பேசக்காரணம் என்ன?
இதனை நான் அரசின் தோல்வியாக கருதவில்லை. ஒருவரின் வீடு கொள்ளையிடப்பட்டால் அதற்கு வீட்டு உரிமையாளரை குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அரசின் அமைப்புகள் அமைதியாக இருப்பது, விவகாரம் அமைதியாகட்டும் என நினைப்பது தவறானது. நாம் இந்த மனநிலையிலிருந்து வெளியே வரவேண்டும். நீதிக்காக நான் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்.
தி வீக்
பிரதீமா நந்தகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக