இடுகைகள்

செஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள்! - ஐகான் ஸ்டார் எல்சா மஜிம்போ

படம்
  எல்சா மஜிம்போ நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், சமூக வலைத்தள பிரபலம் ஊடகம் நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய நினைப்பீர்கள். அதையே செய்வீர்கள். ஆனால், சுற்றியுள்ளவர்கள் உங்களை கிண்டல் செய்வார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையே படாதீர்கள்  இதை சொல்லும் எல்சாவிற்கு வயது 20. என்ன சாதித்துவிட்டார் இந்த வயதில் இப்படி பேசுகிறார் என நினைப்பீர்கள். கென்யாவின் நைரோபி நகரில் பிறந்தவர் எல்சா. செஸ் விளையாடுவது அவருக்கு பிடித்தமானது. அப்போதுதான் கோவிட் 19 பிரச்னை தலைதூக்க தன்னைத்தானே ஊக்கப்படுத்த வினோதமான உடை அமைப்பில் வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டார்.  அவைதான் கென்யாவின் ஐகான் ஸ்டாராக எல்சாவை மாற்றியிருக்கிறது. இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் எல்சா எனும் ஆவணப்படத்தை எடுத்து அதை  திரிபெக்கா திரைப்பட விழாவில் பதிவிட இருக்கிறார்.  90களில் பிரபலமான குளிர்கண்ணாடிகளை அணிந்தபடி வட்டமான சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பேசுகிறார் எல்சா. நமக்கே தோன்றுகிறது இது ஐகானிக்காக இருக்கிறதே... அதேதான் இணையத்தில் இவரது வீடியோக்களைப் பார்த்தவர்களுக்கும் தோன்றியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வ

ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

படம்
  நேர்காணல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள்.  ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை திடீரென அறிவிப்பு செய்தது

நண்பனின் காதலியை வளைக்கும் ஹரியின் காதல் லீலை! - டர்ட்டி ஹரி 2020 - எம்.எஸ். ராஜூ

படம்
                    டர்ட்டி ஹரி   Director: M. S. Raju Produced by: Guduru Sateesh Babu, Guduru Sai Puneeth Writer(s): M. S. Raju   he story is based on 2005 English pscychological thriller film Match Point starring Scarlett Johansson செஸ் பிளேயரான ஹரி ஹைதராபாத்திற்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என வருகிறார் . அங்கு நண்பரின் அறையில் தங்குகிறார் . அவருக்கு வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற லட்சியம் உள்ளது . அதற்காக பெரிதாக ஏதும் செய்வதில்லை . செஸ் பயி்ற்சி கொடுக்கும் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் . எதற்கு அங்குதானே பணக்கார ஆட்கள் வருவார்கள் . அதைப்போலவே அங்கு ஒரு இளைஞன் வருகிறான் .   அவனை செஸ்சில் தோற்கடிக்கிறான் ஹரி , மெல்ல விளையாடிக்கொண்டே அவனது வாழ்க்கை , தொழில் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்கிறான் . நண்பனின் அப்பாவுக்கு இசை ரசனை என்று அறிந்து கேசட்டுகளை வாங்கிக்கொடுத்து ஈர்க்கிறான் . இந்த நேரத்தில் அந்த குடும்பத்து பெண் வசுதா , மெல்ல இவனைக் கவனிக்கத் தொடங்குகிறாள் . அவனுக்கும் தேவை அதுதான் . பின் எப்படி அந்த குடும்பத்தில் செட்டிலாவது ? இதற்கு தேவைப்பட

செஸ்ஸை வேகமாக விளையாடினால் சந்தோஷம் கிடைக்காது! - விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டு சாதனையாளர்

படம்
                விஸ்வநாதன் ஆனந்த் செஸ் வீரர் பெருந்தொற்று காலத்தில் நிறைய மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர் . இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? செஸ் விளையாட நினைத்தவர்கள் கூட முன்னர் நேரமில்லாமல் தவித்தனர் . ஆனால் இந்த ஆண்டில் நிறைய மக்கள் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர் . நிறைய கடைகளில் செஸ் போர்டுகளோடு , அதற்கான கடிகாரங்களும் சிறப்பாக விற்பனையாகிவருகி்ன்றன . எனக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையில் ஆச்சரியம் தருகிறது . முன்னாள் சாம்பியனானா கார்ல்சன் வேகமாக செஸ் ஆடுவது பற்றி பயிற்சி அளிக்கிறார் . அப்படியென்றால் கிளாசிக் செஸ் என்பது எப்படியிருக்கும் ? என்னுடைய தலைமுறையினர் கிளாசிக்கலான செஸ்ஸை விளையாடினர் . ஆனால் அடுத்த தலைமுறை அதில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறது . உண்மையில் இந்த விளையாட்டு வேகமாக மாறினால் அதில் விளையாடும் சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை . கிளாசிக் செஸ்ஸில் மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடவேண்டும் என்று் கார்ல்சன் கூறியுள்ளார் . அது உண்மையும் கூடத்தான் . ஆனால் வேகமாக செஸ் ஆடத்தொடங்கினால் பின்னாளில் பழைய

சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் பலகை விளையாட்டுகள்!

படம்
சமூகப்பிரச்னைகளைப் பேசும் விளையாட்டுகள்! செய்தி: தற்போது இளைஞர்களால் விரும்பி விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகள் சமூகப்பிரச்னைகளையும் கவனப்படுத்தி வருகின்றன. அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்த உதவுகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த ஃபீல்ட்ஸ் ஆஃப் வியூ (Fov) நிறுவனம், பலகை விளையாட்டுகளை(Board games) உருவாக்கி வருகிறது.இதில் குப்பைகள் பெருகுவது, பாலின பாகுபாடு, மக்கள் இடம்பெயர்வு ஆகிய சமூக பொருளாதாரப் பிரச்னைகள்  மையமாகி உள்ளன. இதில் ரப்பிஷ் எனும் விளையாட்டு, திடக்கழிவை நிர்வகிப்பவர்களாக நான்கு அல்லது ஆறுபேர் விளையாடும் ஆட்டம்.  இதில் கிடங்கு முழுக்க குப்பைகளாக நிறைந்தால் ஆட்டக்காரர்கள் தோற்றுவிட்டனர் என்று பொருள். இதில் விளையாடுபவர்கள் பணம், ஆட்கள், தகவல் என பல்வேறு விஷயங்களையும் பயன்படுத்தலாம். ”இந்த விளையாட்டு மக்கள் கழிவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கினோம்” என்கிறார் ரப்பிஷ் விளையாட்டை உருவாக்கியவரான பரத் பாலவல்லி. இதில் மேட் டு ஆர்டர் எனும் விளையாட்டு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறது. மேற்