ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 








நேர்காணல்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்



ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள். 




ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை திடீரென அறிவிப்பு செய்தது போலவே இந்த செயல்பாடும் அமைந்துவிட்டது.  நான்கு மாதங்களாக ஜிஎஸ்டியை கவனித்ததால் எனக்கு புரிந்துள்ளது என்ன வென்றால், அது ஒரு ஆலோசனை அமைப்பு மட்டும்தான். அது கூறும் வரி வீதங்களை மாநிலங்கள்தான் அமல் செய்யவேண்டும். 

இன்று நாடு அதிகாரத்தை எப்படி பயன்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்று தெரியாதவர்களின் கையில் உள்ளது. இதனால் மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்குமான மோதல்கள் உருவாகியுள்ளன. இதனை ஒன்றிய அரசு நினைத்தால் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் அமைப்பையும்  இப்படித்தான் அரைகுறையாக  உருவாக்கியுள்ளனர். 

ஒன்றிய அரசுக்கும், மாநிலத்திற்குமான நம்பிக்கை உடைந்துள்ளது என கூறியுள்ளீர்கள்? குறிப்பாக எப்படி என்று கூறமுடியுமா?

மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்குமான வரி வருவாய் பிரிப்பது சரியாக நடைபெறுவதில்லை. 32 முதல் 42 சதவீதம் வரை மாநிலத்திற்கு வரி வருவாய் கிடைக்கிறது. தனியான ஆராய்ச்சி அமைப்பு வைத்து வரி வருவாயை ஆராய்ந்து பார்த்தாலே, மாநிலத்திற்கு கிடைக்கும் வரி வருவாய் பற்றிய உண்மையை அறிந்துவிடலாம். செஸ் வரி மூலம் ஒன்றிய அரசு அதிக வருவாயை ஈட்டுகிறது. ஆனால் வருவாய் பகிரும் மாநில அரசுக்கு கிடைக்கும் சலுகைகளும் , உதவிகளும் குறைவாக உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. 

சட்டத்தில் கூறியுள்ளபடி 14 சதவீத இழப்பீட்டு பணத்தையும் அவர்கள் தருவதில்லை. கேட்டால் எங்களிடம் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். 40 ஆயிரம் கோடிக்கும் மேல் செஸ் வரியாக கிடைத்தாலும் கூட அதனை மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. 


என்டிஏ அரசில் முதல் ஆட்சியின்போது திமுகவும்தானே பங்கு வகித்தது. இப்போது திமுகவின்  தத்துவம் மாறியுள்ளதா?

இது பாஜக பற்றியதல்ல. ஒன்றிய அரசுக்கும்  மாநில அரசில் ஆட்சியிலுள்ள திமுகவுக்குமான இடைவெளி என்று கூறலாம். திமுகவின் நிலை எப்போதும் மாறவில்லை. எங்கள் அரசு எப்போதுமே கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டதுதான். ஆனால் ஒன்றிய முன்பிருந்ததை விட இப்போது மாறியுள்ளது. குஜராத்தில் முதல்வராக இருந்த பிரதமரும்,  அவருடைய அமைச்சரவையில் இருந்த உள்துறை அமைச்சரும் கூட்டாட்சியை மதித்தவர்கள்தான். ஆனால் இப்போது மையப்படுத்தலுக்கு ஆதரவாளர்களாக மாறி கல்வி, வரி, கழிவறை என அனைத்திலும் தலையிடுகிறார்கள். இன்னொரு வேறுபாடு அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இந்துத்துவ நிலைப்பாடு கொண்ட கட்சியாக இருக்கிறார்கள். அந்த கட்சியில் ஆட்சி செய்த  முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இவர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவராக இருந்தார் என்பதை கவனிக்கவேண்டும். 

கோவில்கள் யாருக்கு உடமையாக இருக்கவேண்டும் என சத்குருவிடம் நேரடியாக மோதல் ஏற்பட்டது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

என்னுடைய கருத்துகள் சத்குரு போன்றவர்களோடு மாறுபடுவது பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பெருமை கொண்ட கோவில்களை அரசு, பராமரிக்க கூடாது என்று கூறுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடில்லை. 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பி வைத்தியநாதன் ஐயர்



கருத்துகள்