பாஸ்போர்ட்டை அரசு மறுக்க முடியுமா? அதற்கு என்ன காரணங்கள் இருக்கும்?

 







ஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர்களை கண்காணிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவற்றில் பங்கேற்றவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதை தடை செய்ய அரசு முயன்று வருகிறது என பலரும் விமர்சித்து வருகின்றன.

ஒருவருக்கு பாஸ்போர்ட வழங்க முக்கியமான ஆவணம், அந்த நாட்டின் குடிமகனாக இருப்பதுதான். அடுத்துதான் பிற விஷயங்கள் முக்கியத்துவம் பெறும். நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவற்றை கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு அரசு பாஸ்போர்டுகளை வழங்குவதில்லை. மேலும், பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவர்  எந்த குற்ற வழக்கிலும் இருக்க கூடாது. கோர்ட்டில் விசாரணைக்கு அழைப்பு வந்திருந்த சமயம் என்றாலும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்கலாம். 

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967படி,  பாஸ்போர்ட்டை  அதனை வழங்கும் அதிகாரி  ஒருவர் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியும். இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. சட்டப்பிரிவு 22 படி, குறிப்பிட்ட காலம் அதாவது, ஓராண்டு வரையில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பாஸ்போர்டுகளை  வழங்கலாம். குற்றவழக்கில் ஒருவர் பெயர் இருக்கும் நிலையில் கூட சிறப்பு சட்டம் முறையில் அவர்களுக்கு விதிவிலக்காக அனுமதியளிக்கலாம். 


கருத்துகள்