சட்டவிரோதமாக விற்கப்படும் குட்கா, பான்பராக் வகைகள்! - அரசையும் மிஞ்சும் புகையிலை நெட்வொர்க்

 





குட்கா பஞ்சாயத்து! - லாக்டௌனிலும் கல்லா கட்டும் நெட்வொர்க்


பொதுமுடக்கமோ, பஞ்சமோ எது வந்தாலும் மது, போதைப்பொருட்களுக்கான தேவை என்பது எப்போதும் குறைவதில்லை. இவை குறைவர கிடைப்பதில் அரசும் இப்போது கவனம் செலுத்தி வருகிறது. வரிவருவாய் என்ற காரணத்திற்காக அரசு மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. போதைப்பொருட்களைப் பொருத்தவரை புகையிலை சார்ந்து செயல்படும் நெட்வொர்க் மிக வலுவானது. 

அவசியமான அரிசி, பருப்பு கூட கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழகத்திலுள்ள பெட்டிக்கடைகளில் ஹான்ஸ், கூல் லிப், ஸ்வாகத், ரெனியோ ஆகிய பிராண்டுகள் மிகச்சிறப்பாக விற்கப்பட்டு வருகின்றன. குட்கா, பான்பராக் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தடை செய்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பெரும்பாலான கடைகளில் புகையிலை சார்ந்த பொருட்களை கூடுதல் விலை கொடுத்தால் வாங்கிவிட முடிகிறது. அண்ணாசாலையில் உள்ள சில கடைகளைத் தவிர்த்து பெரும்பாலான கடைகளில் இப்பொருட்களை மூன்று மடங்கிற்கு விலை கூட்டி விற்று வருகின்றனர். போத்தீஸ் ஆடிதள்ளுபடி போல இதிலும் போதை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. விரைவில் கேஷ்பேக் ஆபரும் அறிவிக்கலாம். 

 2013ஆம்  ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கான தடை விதிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 639 கோடி அளவுக்கு புகையிலை பொருட்களின் வியாபாரம் களை கட்டியுள்ளது. அரசின் அமைப்புகள் ஆண்டுதோறும் தடுக்கும் புகையிலைப் பொருட்களின் மதிப்பு நூறு கோடிதான். இப்போது இது தொடர்பான தகவல்களைப் பார்ப்போம். 

17.11 கடைகள் சோதனையிடப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு ஜூன் வரையில் இச்சோதனைகள் நடந்தன. 

முறைகேடாக புகையிலைப் பொருட்கள் விற்றதற்காக 1,17,870 கடைகள் மூடப்பட்டுள்ளன. 


800 டன் எடையும், 29 கோடி மதிப்பும் கொண்ட குட்கா, பான் மசாலா தயாரிப்புகள் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

597 குற்ற வழக்குகள் புகையிலைப் பொருட்கள் விற்றதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. 


90 வழக்குகளில் 14.63 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்