இந்தியாவின் முக்கியமான தருணங்கள்! இந்தியா 75
இந்தியாவின் முக்கியமான தருணங்கள்
இந்தியா 75
அமைதியான மாநிலங்கள்
பிரிவினை நடந்து ரத்த ஆறு ஓடிய பிறகு, இந்திய மாநிலங்களில் நடைபெற்று முக்கியமான மாற்றம், குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் அதிகம் இருந்தால் அதனை தனியாக பிரிக்கலாம் என்று எழுந்த போராட்டம்தான். ஆனால் பிரதமர் நேரு இதனை ஏற்கவில்லை. தீர ஆலோசித்து மொழி சார்ந்து மாநிலங்களை பிரித்து எல்லைகளை அமைத்தார். எல்லை சார்ந்த பிரச்னைகள் மாநிலங்களுக்குள் ஏற்பட்டால் இந்திய ஒன்றியம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்று பிரிவினை வாத சக்திகள் அதிகாரத்தைப் பெற்று தேர்தல் ஆதாயங்களுக்காக மாநிலங்களை உடைத்து பிரிக்க முயன்று வருகின்றனர். ஆனால் அன்று நேரு எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் மக்களையும், நாட்டையும் பற்றி மட்டுமே யோசித்தார். அதனால்தான் நாட்டிலுள்ள மாநிலங்கள் அமைதியாக வளர்ச்சியை நோக்கி திரும்பின.
பால் உற்பத்தியில் புரட்சி!
வெண்மை புரட்சி என்றுதான் கூறவேண்டும். வர்கீஸ் குரியனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரு, இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்கள் தந்த ஆதரவு காரணமாக ஆனந்த் நிறுவனம் குஜராத்தில் உருவானது. இந்த கூட்டுறவு நிறுவனத்தினால் அங்கு வறுமையில் வாழ்ந்த விவசாயிகளுக்கு சரியான வருமானம் உறுதி செய்யப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்களின் அதீத விலை வைகும் போக்கு மட்டுப்பட்டது. குறைந்த விலையில் நிறைந்த தரத்தை கொண்டு அமுல் இன்றும் அரசு நிறுவனம் என்றாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு அமைப்பில் பால் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
வடகிழக்கில் அமைதி
ராஜீவ்காந்தியும், மிசோ அமைப்பின் தலைவரான லால்டெங்கா ஆகிய இருவரும் 1986ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதனால் அங்கு ஏற்பட்டு வந்த தீவிரவாத தாக்குதல்கள் குறையத் தொடங்கின. இதன்மூலம் இந்திய அரசு வன்முறையை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என உலகிற்கு அறிவிப்பது போல இந்த செயல்பாடு அமைந்தது. 35 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு அமைதி நிலவியது என்றால் அதற்கு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம்தான் முக்கியக் காரணம்.
மக்களிடம் அதிகாரம்
மையத்தில் அதிகாரம் குவிந்து கிடந்தால் நம்மால் தெருவிலுள்ள பாதாள சாக்கடையைக் கூட சுத்தம் செய்யமுடியாது. இதை ஆராய்ந்த அரசு 1992ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி, கிராமங்களின் நடைபெறும் பணிகளை பஞ்சாயத்துகளே முடிவு செய்துகொள்ளலாம். இதற்கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்குகிறது. இந்த வகையில் பழங்குடி, தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது முக்கியமான சாதனை. மக்களுக்கு மிக அருகில் அரசு சென்று இயங்கியது இந்த வகையில் முக்கியமானது.
நலத்திட்டம்
2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டது. எளிமையாக சொன்னால் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம். இதனால் படிக்காத, கல்வியறிவு இல்லாத மக்களுக்கும் வேலைவாய்ப்பை மத்திய அரசு உறுதி செய்தது. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இத்திட்டத்தை பின்னாளைய அரசு திட்ட நிதியை குறைத்தாலும் நிறுத்த முடியவில்லை என்பது இதன் வெற்றிக்கு சான்று.
மதிய உணவுத்திட்டம்
மத்திய அரசு 1995ஆம் ஆண்டு முதல் மதிய உணவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தை நீதிக்கட்சி தொடங்கிவைத்ததை காமராஜர் சிறப்பாக மேம்படுத்தினார். பிறகு வந்த அனைத்து முதல்வர்களும் இதனை மென்மேலும் விரிவுபடுத்தி மாணவர்கள் ஊட்டச்சத்துடன் கல்வி பெற உதவினர் என்பது மறக்க முடியாத சமூகநீதி வரலாறு. வட இந்திய மாநிலங்களில் மதிய உணவு திட்டத்திலும் கூட முட்டை கூடாது, வெங்காயம், பூண்டு கூடாது என சைவ உணவு கருத்தியலை புகுத்தினாலும், இத்திட்டம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.
அருகில் வா புலியே!
1972ஆம் ஆண்டு இந்தியாவில் 2 ஆயிரம் புலிகள் இருந்தன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 58 ஆயிரமாக இருந்தது. 1973ஆம்ஆண்டு புலிகளைக் காக்கவென தனித்திட்டம் உருவாக்கப்பட்டது. புலிகளின் வாழிடங்களை பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 2,461ஆக அதிகரித்திருந்தது. மகத்தான வெற்றி பெற்ற திட்டத்தை அடியொற்றி யானைகளை காப்பாற்றும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
உயிர் நீர்
இந்தியாவில் தற்போது 5,264 பெரிய அணைகள் உள்ளன. 437 அணைகள் கட்டுமானத்தில் உள்ளன. ஒடிஷாவில் உள்ள ஹிராகுட் அணை இந்தியாவில் பெரிய அணையாக கருதப்படுகிறது. 1957ஆம் ஆண்டு முதலாக இந்த அணை பயன்பாட்டில் உள்ளது. நகரங்களின் வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு பெரிய அணைகள் பயன்படுகின்றன.
இணைக்கும் பாலங்கள்
இந்தியாவை ஒரே நாடாக இணைப்பதில் பாலங்களுக்கு முக்கியப் பங்குண்டு. 2017ஆம் ஆண்டு அசாம் தோலா சதியா என்ற பாலம் நீளமான பாலமாக கட்டப்பட்டுள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் செனாப் ரயில் பாதை உயரமான ரயில்பாதையாக கூறப்படுகிறது. பாலங்கள் வணிகம் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளன.
போலியோவை துரத்து!
2014ஆம் ஆண்டு போலியோ இல்லாத இந்தியா என்று அறிவித்துவிட்டார்கள். கடைசி போலியோவால் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டது 2011இல்தான். நாடு தழுவிய தடுப்பூசித் திட்டம், தொடர்ச்சியாக வீட்டுக்கு சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, தடுப்பூசி முகாம்கள் என இந்திய அரசு உழைத்து போலியோவை விரட்டியுள்ளது.
ஹெச்டி
ரேச்சல்
கருத்துகள்
கருத்துரையிடுக