இடுகைகள்

குகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்

படம்
  ரீயூனியன் – தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ் சீன டிவி தொடர் 2020 -july to  august 32 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் இயக்குநர் பான் அன் ஸி வூ குடும்பம் கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால் பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங், அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான். கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும் தீரன். வூசியின் தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்ட

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக உருமாறுகிறது. இப்பூ

இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்! இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன.  ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில்,  குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.  குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9  ஆராய்ச்சியாளர்கள்  ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.  மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. ”ஏரி அல்லது ஆற்று மீன்களைப் பற்றி

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

புவியியல் - துணுக்குகள்!

படம்
  ப்ரூசைட் 1824ஆம் ஆண்டு, அமெரிக்க கனிமவியலாளர் ஆர்ச்சிபால்ட் ப்ரூஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்ட கனிமம். புரூசைட் என்பது, மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை. வெள்ளை, பச்சை, பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களின் கலவையாக இருக்கும்.  காணவேண்டிய குகைகள் ஆர்டா குகை, ரஷ்யா கடல் நீருக்கடியில் உள்ள குகை. உலகில் கடல் நீருக்கடியில் அமைந்த நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. உலகளவில் ஆழ்கடல் நீச்சல்வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே.  ஹாங் சன் டூங், வியட்நாம் குகையில் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. உலகில் உருவான இயற்கையான பெரிய குகைகளில் இந்த குகை, முக்கியமானது. மரங்கள் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக உயரத்தில் வளர்ந்துள்ளன.  டாப்சின்ஸ்கா ஐஸ் கேவ், ஸ்லோவேகியா இந்த குகையில் உள்ள சுவர்கள் எல்லாமே ஐஸால் ஆனவை. 26 மீட்டர் உயரத்திற்கு ஐஸ் உருவாகியுள்ளது. வெளியிலுள்ள காற்று குகையின் வெப்பநிலை மைனஸ் 3.8 டிகிரி செல்சியசாக பாதுகாக்கிறது.  ஜெயன்ட் காஸ்வே (Gaint causeway) அயர்லாந்தின் வடக்குப்பகுதியில் ஜெயன்ட் காஸ்வே அமைந்துள்ளது. இங்கு கற்களால் அமைந்த தூண்கள் போன்ற வடிவில் பாறைகள் காணப்படுகின்றன. இங்குள