கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்
மயிலாப்பூர் டைம்ஸ்
ஆராய்ச்சியாளரின் அவதி...
நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.
பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.
போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.
ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.
இதற்குப் பிறகு தேநீர் குடித்துவிட்டு வந்தால், மின்னஞ்சலில் தொடர் கட்டுரை மல்லுக்கட்டு நடைபெற்றது. சற்று பின்னோக்கிப் போவோம். இதற்கு முன்னர், கோவை ஆராய்ச்சியாளரிடம் லிவ் மின்ட் இதழில் வந்த செய்தியை மொழிபெயர்த்தபோதே எங்கள் இதழில் எழுத ஆர்வமா என்று கேட்டேன். அப்போது ஆஹா அதற்கென்ன என்றவர் அதற்குப் பிறகு ஒரு துளி புல்லையும் கிள்ளிப்போடவில்லை. இப்போது, என்னடாவென்றால் என்னுடைய கேரியர் கெட்டுப்போய்விடும். தவறாக செய்தியை போடாதீர்கள் என எழுதியிருந்தார். அவர் ரிசர்ச் கேட் இதழில் வந்த கட்டுரையை அவரது அனுமதி கேட்காமல் பிரசுரித்தால் நிச்சயம் அது என் தவறுதான். ஒரு ஆராய்ச்சியாளர் என்ன செய்கிறார் என்பதைப்பற்றிய மிகச்சுருக்கமான குறிப்பு மட்டுமே எழுதப்பட்டது.
இத்தனைக்கும் ஆங்கிலத்தில் வந்த கட்டுரையை பெரியளவு ஏதும் மாற்றாமல் மொழிபெயர்த்து புவியியல் பகுதிக்கு எழுதியதில், இத்தனை பிரச்னை. இதன் தொடக்கம், அதை உருவாக்கியதும் நான்தான். சாதித்துவிட்டோம் என்ற பெருமையில் பெரிய புடுங்கி போல அச்சில் வெளியான கட்டுரையை நான் ஜேபிஜி படமாக எடுத்து ஆராய்ச்சியாளருக்கு அனுப்பினேன். எதிர்காலத்தில் கூட அவர் இதழில் எழுத வாய்ப்புள்ளதே என நினைத்தேன். ஆனால் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகிவிட்டது. அப்படி நினைத்து உருவான பிரச்னைகளால் தான், எனக்கு புட்டத்தில் அங்குசம் குத்திய உணர்வு.
அத்தனை குற்றங்கள். கட்டுரையில் கோவை ஆராய்ச்சியாளர் யார், என்ன செய்கிறார் என்பதை மட்டுமே எழுதினேன். ஆனால், அது அவரது வேலையை பாதிக்குமாம். ஆங்கிலத்தில் சந்தனமாக மணக்கிற கட்டுரை தமிழில் எழுதும்போது ஈ மொய்க்கிற பீயாய் நாற்றமடிக்கிறது. நல்ல மனம், நல்ல குணம்....
மாணவர்களிடம் ஆராய்ச்சி பற்றிய செய்தியை எழுத தவறான ஆட்களை தேர்வு செய்துவிட்டோம் என்று எனக்கு தோன்றியது. சரிதான். இனி எதற்கு அவர்களை நாம் செய்தியாக்கப் போகிறோம். எழுதும் ஆர்வமுள்ள வேறு ஆட்களை தேடுவோம். கோவை ஆராய்ச்சியாளருக்கு திறமையை விட அரசியல் செய்து முன்னேறுவதிலும், கண்மூடித்தனமாக சிலரை நம்புவதிலும் தான் மனம் செல்கிறது. இனி சொல்ல என்னவிருக்கிறது?
நன்றாக இருங்கள் ஆராய்ச்சியாளரே... சரியான யோசனையை தவறான ஆட்களின் கதவைத் தட்டி சொன்னதுதான் தவறாகப் போய்விட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக