கருவுறாத முட்டை செல்களிலிருந்து கரு உருவாவதைப் பற்றி கூறியவர் - ஆஸ்கர் ஹெர்ட்விக்
பயா(லஜி) டேட்டா
ஆஸ்கர் ஹெர்ட்விக் (Oscar Herwig 1849-1922)
ஜெர்மனியின் ஹெசன் நகரில் பிறந்தார். பெற்றோர், கார்ல் ஹெர்ட்விக், எலிசெ டிராப்.ஜெனா பல்கலைக்கழகத்தில் படித்தார். உடற்கூறியல் மருத்துவர் எர்னஸ்ட் ஹெக்கல், ஆஸ்கருக்கு வழிகாட்டினார். ஆஸ்கர், முதலில் கரு மேம்பாடு பற்றி படித்தவர், பிறகு கருவுறுதலின் செயல்முறைகளைக் கற்க ஈடுபாடு காட்டினார். 1875ஆம் ஆண்டு ஹெக்கலோடு மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு சென்றார். அங்கு முள்ளெலிகளின் இனப்பெருக்கும் பற்றிய ஆய்வைச் செய்தார். தனது ஆய்வை ஆவணமாகவும் பதிவு செய்தார்.
1890ஆம் ஆண்டு நட்சத்திரமீன் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதில், கருவுறாத முட்டை செல்லில் இருந்து கரு உருவாவதைப் பற்றி முதன்முதலில் தகவல் அறிந்து ஆவணப்படுத்தியவர் ஆஸ்கர்தான். இதற்கு, பார்த்தினோஜெனிசிஸ் (parthenogenesis) என்று பெயர்.உடற்கூறியல் - உயிரியல் கழகத்தின் தலைவராக 1888 - 1921 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.
சாதனை
1916ஆம் ஆண்டு, டார்வினின் பரிணாமவளர்ச்சி கோட்பாட்டை எதிர்த்து “The Origin of Organisms: a refutation of Darwin’s theory of chance” என்ற நூலை எழுதினார்.
https://www.bbvaopenmind.com/en/science/leading-figures/oscar-hertwig-the-first-man-to-observe-sexual-reproduction/
https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/hertwig-wilhelm-august-oscar
கருத்துகள்
கருத்துரையிடுக