இடுகைகள்

மொழியாக்க கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;

படம்
  மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;                                     - சீதாராம் யெச்சூரி      ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை இணைக்கும் புள்ளியாக உள்ள முக்கியமான தலைவரான சீதாராம் யெச்சூரி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளவர் ஆவார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. (எம்) கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியின் சாதனைகள் குறித்தும் உண்மையில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றனவா என்பதைக் குறித்தும் விரிவாக நம்மிடையே உரையாடுகிறார். ஆங்கிலத்தில்: உஷினார் மஜூம்தார் தமிழில்: அன்பரசு சண்முகம் கடந்த 18 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்? மோடி அரசு தாராளமயமான எப்டிஐ வணிகம் மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் மிக எளிதில் தடையில்லாமல் நம் நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் மலிவான தொழிலாளர் சக்திகளையும் பயன்படுத்தி

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில் அவற்றினை தயாரித்து கொள்கிறோம். எங்களது மரநில அமைவு முறையினை சோதித்த டெல்லி, அகமதாபாத், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் ’’ என்று உற்சாகமாய் பேசும் விஜய் நிஷாந்த்

Article for logathinte dosth company

படம்

புனித பசு

புனித பசு ஆனந்த் டெல்தும்டே தமிழில் - அன்பரசு ஷண்முகம் நீண்ட பட்டியலாய் நீளும் தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள், கர்  வாப்ஸி குறித்த கபடமான பேச்சுகள், இந்துத்துவத்தைக் காக்க இந்துப்பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளேனும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி பிறப்பிக்கப்படும் ஆணைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமாகி தொடர்ந்து அவர்கள் இழிவுபடுத்தப்படுவது என்று செயல்பட்டுவரும் பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவவாதி மேம்பாட்டு வளர்ச்சியில் கவனம் குவிக்கும் வகையில் புனித பசு என்பதனையும் அதில் இணைத்துக் கொண்டுள்ளது. மார்ச் 3 அன்று, மகராஷ்ட்ரா அரசு பசுக்களையும் அதன் கன்றுகளையும் இறைச்சிக்காக கொல்வது மட்டுமல்லாமல் அதன் இறைச்சியை வேறு எந்த வகையிலும் வைத்திருப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் கொடிய சட்டத்தினை அங்கீகரித்து செயல்படுத்தியுள்ளது. மகராஷ்ட்ரா அரசு இத்தகைய இறைச்சி குறித்து பல்வேறு தடைகள் மற்றும் வழிமுறைகளினை முன்பே கொண்டுள்ள மாநிலம் ஆகும்.  மகராஷ்ட்ரா விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1976 ஆனது  இறைச்

உணவுகளை ஆராய பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்!

      உணவுகளை ஆராய பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்! அனிஷா திமான்                            தமிழில்: ஜோ ஃபாக்ஸ் பார்ச்சூன் பட்டியலிட்ட 500 நிறுவனங்களில் வெற்றிகரமான மேலாண்மை ஆலோசகராக இருக்கும் வாணி ஹரி இணையத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற மனிதர்களில் பாரக் ஒபாமா, ஜே.கே. ரௌலிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயதான வாணி ஹரி உடல் எடை அதிகமாகி பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளுடன் மாற்றம் தேவைப்படும் நிலையில் இதற்கான மூலகாரணத்தை அறியாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ''மற்ற அனைத்து மக்களைப்போலவே நானும் அமெரிக்க உணவுமுறைப்பழக்கத்தை பின்பற்றி வந்தேன். அலுவலகத்தில் கிடைக்கும் உணவுகள் (அ) சாலையோரத்தில் கிடைக்கும் உணவுகளையும் நான் வேலை செய்யும் பரபரப்பான வேலைநேரங்களுக்கிடையில் சாப்பிட்டுவிட்டு மேலாண்மை ஆலோசகராக பணிபுரிந்துவந்தேன். அதுவே பின் என் உடலை கடுமையான நோய்க்கு ஆளாக்கியது'' என்று கூறும் வாணிஹரியின் பெற்றோர் இவர் பிறப்பதற்கு முன்பே பஞ்சாபிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து வந்தவர்களாவ

நேர் காணல்

நேர் காணல் ''சங்பரிவாரின் கவனம் மாறிவிட்டது; அவர்கள் முஸ்லீம்களின் மாறுபட்ட எதிர்வினையினை அறிவார்கள்'' பாம்பே கத்தோலிக்க சபையின் முன்னாள் தலைவரான டால்பி டி சூஸா , தேவாலயங்கள், பள்ளிகள் மீது நடக்கும் தாக்குதல்கள் தனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை என்றும், இவை வாஜ்பாய் அரசின் கீழும் நடந்தவைதாம் என்கிறவர், ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் வெற்றியின் வழியே இந்துக்களின் நாட்டினை அமைக்க முயலும் வழி முறையே இது என்று ஆல்கா டெல்லிஸிடம் கூறுகிறார்.                                                                 ஆல்கா டெல்லிஸ் தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ் தேவாலயங்கள் மீதான தாக்குதல் மற்றும் மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்திலுள்ள கங்னாபூரில் கன்னியாஸ்த்ரீ மீதான வன்முறைகள் கத்தோலிக்க சமூகத்தை பயமுறுத்தியுள்ளது என்று முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியா ரிபெய்ரா கூறியிருக்கிறார். இனக்குழுவின் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தில் உங்கள் பார்வை என்ன? இந்த தாக்குத

'இந்தியாவின் வன மனிதன்'

'இந்தியாவின் வன மனிதன்' பசுமைப்போராளி ஒருவர் பிரம்மபுத்திரா ஆற்றில் மணல்பரப்பில் 1,00,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். பிரசாந்தா மஜூம்தார் தமிழில்: அன்பரசு ஷண்முகம் 30 க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் மெய்மறந்து பரவசமாக இந்தியாவின்  வனமனிதனான ஜாதவ் பேயங்க் கூறும் உறுதிமொழியினைக் கேட்டபடி அவரைச்சுற்றி நிற்கின்றனர்.  ''நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன. அவை வெளியிடும் ஆக்ஸிஜன்தான் நம்மை வாழவைக்கிறது. மரங்களை வெட்டினால் விரைவில் அனைவரும் அழிந்துபோய்விடுவோம். எனவே மரங்களை வீழ்த்தாமல் வளர்ப்போம் '' என்று பேயங் ஆறிலிருந்து எட்டாம்வகுப்புவரையிலான மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். அஸாம் - நாகலாந்து எல்லையான உரியம்காட் பகுதியிலிருந்து பேயங்கினை சந்திக்க இந்த மாணவர்கள் வந்துள்ளனர். இவரினை முலாய் என்றும் அழைக்கின்றனர். குழந்தைகள் பள்ளம் மற்றும் தூசியான சாலைகளைக்கடந்து, பிரம்மபுத்திரா நதியினை இயந்திரப்படகு மூலம் கடந்து தீவினை அடைந்து , அங்கிருந்து ட்ராக்டர் மூலம

கல்வியின் ஒளிக்கீற்று

  கல்வியின் ஒளிக்கீற்று அசாம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் மக்களின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் கல்விக்கூடம் இலவச கல்வியை 500 குழந்தைகளுக்கு வழங்கிவருகிறது. ப்ரசாந்தா மஜூம்தார் தமிழில்: வின்சென்ட் காபோ 12 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் - மேகாலயா எல்லையிலுள்ள பமோகி எனும் பழங்குடிமக்கள் வாழும் கிராமத்தில், 27 வயதான அறிவியல் பட்டதாரியான உத்தம் தெரோன் தம் மக்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை கூறியபோது, அவரது நண்பர்களின் கேலிச்சிரிப்பில் கிராமமே அதிர்ந்தது. தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த தெரோன் கைவிடப்பட்ட மாட்டுக்கொட்டகை ஒன்றினை வகுப்பாகக்கொண்டு நான்கு மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கத்தொடங்கினார். இன்று 500 க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளிலிருந்து இளம்வயதினர் வரை தோராயமாக இவரது பரிஜித் அகாதெமி மூலம் 100% கல்வி அறிவினைப் பெற பெருமையோடு பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மோகியிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பழங்குடி குக்கிராமங்களிலிருந்தும் தெரோன் பள்ளிக்கு கல்வி கற்க வருகிறார்கள். பள்ளியின் நோக்கம் குறித்து தெரோன் கூறுகையில், அடித்தட்டு மக்

நேர்காணல் ஜிதேந்தர் பார்க்கவா

     நேர்காணல் ஜிதேந்தர் பார்க்கவா ''ஸ்பைஸ் ஜெட் கிங்ஃபிஷரின் நிலையை சந்திக்காது என்று நம்புகிறேன்'' பொருளாதார சிக்கல்களால் ஸ்பைஸ்ஜெட் தள்ளாடி நிறுவனத்தை மூடும் விளிம்பிற்கு வந்துள்ளதை அரசிடம் தெரிவித்து உதவி கோரியுள்ளது. விமானத்துறை நிபுணரும், ஏர் இந்தியா முன்னாள் நிர்வாக அதிகாரியுமான திரு.ஜிதேந்தர் பார்க்கவா ஸ்பைஸ்ஜெட் என்ன தவறுகளைச்செய்தது? என்ன பாடங்களை வருங்காலத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கமாகப்பேசுகிறார். ஸ்ரீதர் குமாரசுவாமி தமிழில்: அன்பரசு ஷண்முகம் 1.ஸ்பைஸ்ஜெட் வேகமாக ஆச்சர்யமூட்டும் விதத்தில் முதலீட்டாளரை தேடி அடையுமா? அல்லது நிறுவனம் விரைவில் மூடும் வாய்ப்புகள் உண்டா? ஸ்பைஸ்ஜெட் தற்போது சந்திக்கும் குழப்பங்கள் விமானத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஆச்சர்யம் தராது. இப்படியான நிலைமை வரும் என்று முன்பே அவர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை பலர் கூறினாலும், விமானநிர்வாகம் அக்கருத்துக்களை புறந்தள்ளி, அக்கருத்துக்களை கூறியவர்களை நோக்கி தவறான யூகம் என்றார்கள். மேலும் இந்த

வானவில்லை இதயங்களில் வரைபவர்

வானவில்லை இதயங்களில் வரைபவர் மதுபானி வகை ஓவியங்களின் மூலம் பெறும் தொகையினை ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் செலவழிக்கிறார் மும்பையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர்.                                                                                                   சம்ஹதி மொகபத்ரா                                                                                  தமிழில்: ஜோஸபின் கார்த்திக் நீண்ட பகல்பொழுதின் வேலையின் பின் வணிக அதிகாரியான அம்ரிதா மிஸ்ரா வண்ணக்குப்பிகளோடும், தூரிகைகளோடும் அமர்ந்து ஒரு மரத்தின் கீழ் நிற்கும் கிராமத்துப்பெண் சித்திரத்திற்கு இறுதி வடிவமைப்புகளை கொடுக்கிறார். வளமான தூரிகை இழுப்புகள், பிரகாசிக்கும் வண்ணங்கள் என மதுபாணி முறையில் அமைந்த அவரின் ஓவியம் மெல்ல உயிர்பெற்று எழுகிறது. 27 வயதாகும் அம்ரிதா தன் வேலைநேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஓவியம் தீட்டுவது கலையின் மீதான நேசம் மட்டும் காரணமல்ல.  வணிக நிறுவன நிர்வாகியாக மும்பையில் பணிபுரியும் அம்ரிதா தனது மதுபானி ஓவியங்களை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களிலும் விற்பதன் மூலம் உதவி தேவைப்படுபவர்க